Samsung Galaxy M31s வேரியன்ட், கலர், சிறப்பம்சங்கள் லீக்கானது!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 25 ஜூலை 2020 11:07 IST
ஹைலைட்ஸ்
  • கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் பெரிய டிஸ்பிளே இருக்கலாம்
  • USB டைப் சி போர்ட், 25 வாட் சார்ஜர், 6,000 mAh சக்தி கொண்ட பேட்டரியுடன்
  • செல்ஃபி கேமரா 32 மெகா பிக்சல்

Samsung Galaxy M31s பின்புறத்தில் நான்கு கேமராக்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Photo Credit: Amazon

சாம்சங் தரப்பில் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 31 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நிலையில், இதன் கலர், வேரியன்ட், சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

சாம்சங் தரப்பில் இந்தாண்டு கேலக்ஸி M31 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. இது வரும் ஜூலை 31 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சாம்சங் வாடிக்கையாளர்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது, அது எப்படி இருக்கும் என்பது குறித்து இஷான் அகர்வால் என்ற டெக் வல்லுநர் டுவீட் செய்துள்ளார். அதன்படி, கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் அளவு கொண்ட பெரிய டிஸ்பிளே, அமோலேட் திரை, பின்புறத்தில் நான்கு கேமராக்கள், 6,000 mAh பேட்டரி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 64MP பிரைமரி கேமரா, 12MP செகன்டரி வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா,  5MP டெப்த் சென்சார் கேமரா, மற்றொரு 5MP டெப்த் கேமரா ஆகியவை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்புறத்தில் உள்ள செல்ஃபி கேமரா 32 மெகா பிக்சலுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 9611 பிராசசர், USB டைப் சி போர்ட், 25 வாட் சார்ஜர், 6,000 mAh சக்தி கொண்ட பேட்டரியுடன் அறிமுகமாகலாம். 6GB ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியன்டுகளில் கேலக்ஸி M31s கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதன் விலை எவ்வளவு என்பது இதுவரையில் கணிக்கப்படவே இல்லை. அமேசானில் அடுத்த மாதம் பிரைம் டே சேல் வருகிறது. அந்த சேலில் சாம்சங் கேலக்ஸி M31s ஆஃபரில் கிடைக்கும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருகின்றனர்.


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Crisp AMOLED display
  • Bundled fast charger
  • Bad
  • Dated processor
  • Weak low-light camera performance
  • Poor video stabilisation
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 12-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung Galaxy M31s, Samsung Galaxy M31s specifications
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பிரபலமான 'சோரா' AI வீடியோ செயலியை மூடுகிறது ஓபன்ஏஐ; டிஸ்னியுடனான மெகா ஒப்பந்தமும் முறிவதாகத் தகவல்
  2. தாய்லாந்தின் NBTC சான்றிதழ் தளத்தில் சியோமி 17T ப்ரோ: விரைவில் சர்வதேச அளவில் அறிமுகம்
  3. முழுத்திரை வசதி கொண்ட ஐபோன் 20 இல்லையா? ஆப்பிளின் 20-வது ஆண்டு மாடலில் அதன் மிக முக்கிய அம்சம் ஏன் இடம் பெறாமல் போகலாம்?
  4. ஐபோன்களுக்கான iOS 26.4 அப்டேட்: ஆப்பிள் மியூசிக்கில் AI மூலம் உருவாக்கப்பட்ட பிளேலிஸ்ட்கள் மற்றும் 8 புதிய எமோஜிகள்
  5. சாம்சங் கேலக்ஸி S27 அல்ட்ராவில் டிஜிடைசருடன் கூடிய 'S Pen' ஆதரவு தொடர்ந்து இடம்பெறும்
  6. இந்தியாவில் வெளியாகும் முன்பாக ரியல்மி 16 5G பேட்டரி திறன், நிறங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் வெளியீடு
  7. BSNLல் CNAP வசதி தொடக்கம்; நாடு தழுவிய 'காலர் ஐடி' சேவை விரைவில் எதிர்பார்ப்பு
  8. 7,500mAh பேட்டரி, இரட்டை 50-மெகாபிக்சல் கேமராக்களுடன் ஒன்பிளஸ் 15T அறிமுகமானது: விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ
  9. Apple Maps Ads Coming Soon to iPhone and Other Devices: Apple's New Plan
  10. ஜூன் 8-ல் ஆப்பிளின் WWDC 2026 தொடக்கம்: AI மற்றும் மென்பொருள் மேம்பாடுகள் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.