வெளியானது சாம்சங் கேலக்ஸி A9ப்ரோ(2019)! - விலை விவரம்..!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 29 ஜனவரி 2019 08:57 IST
ஹைலைட்ஸ்
  • இந்த போனின் கொரிய விலையானது, KRW 599,500 (தோராயமாக ரூ.37,800) ஆகும்.
  • கொரியாவில் 28ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
  • இந்த போன் பின்பக்கம் மூன்று கேமரா கொண்டுள்ளது.

The Samsung Galaxy A9 Pro (2019) packs a 3,400mah battery

சாம்சங் கேலக்ஸி A9ப்ரோ (2019) ஸ்மார்ட்போனானது தென்கொரியாவில் வெளியானது. இந்த போனானது, இன்பினிட்டி ஓ டிஸ்பிளே, 6ஜிபி ரேம், 128ஜிபி நினைவகம் கொண்டுள்ளது. இதன் தோற்றம் மற்றும் சிறப்பம்சம் கொண்டு பார்க்கும்போது இது சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன் வேரியண்ட்டை போல் இருக்கிறது. இந்த போனில் பின்பக்கம் 3 கேமராக்கள் உள்ளன. முன்புறம் 24 மெகா பிக்செல்ஸ் செல்பி கேமரா கொண்டுள்ளது. 3,400mAh பேட்டரி திறன் மற்றும் பின்பக்கம் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A9ப்ரோ (2019) விலை,

சாம்சங் கேலக்ஸி A9ப்ரோ (2019) ஸ்மார்ட்போனின் கொரிய விலையானது, KRW 599,500 (தோராயமாக ரூ.37,800) ஆகும். இந்த போன் ப்ளு, பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. கொரியாவில் 28ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. மற்ற சந்தைகளில் எப்போது வருகிறது என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.

சீனாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன் வடிவமைப்பு கொண்டுள்ளது. இன்பினிட்டி ஓ டிஸ்பிளே ஸ்கிரின் கொண்ட இந்த போனின் இடது முனையில் கேமரா சென்சார் கொண்டுள்ளது. பின்புறம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. யூஎஸ்பி - சி டைப் போர்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி A9ப்ரோ (2019) சிறப்பம்சங்கள்,

சாம்சங் கேலக்ஸி A9ப்ரோ (2019) ஸ்மார்ட்போனானது, 6ஜிபி ரேம், 3,400 mAh பேட்டரி மற்றும் 128ஜிபி நினைவகம், 19.5:9 ரேஸியோ அளவை கொண்டுள்ளது.

இந்த போன் பின்பக்கம் மூன்று கேமராவையும், முன்பக்கம் 24 மெகா பிக்செல்ஸ் சென்சாரும் கொண்டுள்ளது. இதில் பின்பக்கம் 24 மெகா பிக்செல்ஸ் சென்சார் ஒன்றும், 10 மெகா பிக்செல்ஸ் சென்சாரும், 5 மெகா பிக்செல்ஸ் சென்சாரும் கொண்டுள்ளது. ஸ்நாப்டிராகன் 710 பிராசஸர் கொண்ட இந்த போனானது 6.4 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது.

 
KEY SPECS
Front Camera 24-megapixel
Rear Camera 24-megapixel + 10-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3400mAh
OS Android
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , Samsung, Samsung Galaxy A8s
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ரெனோ 16 இந்திய அறிமுகம்; புதிய ஹெட்செட், பப்பிள் அசிஸரியுடன் வரக்கூடும்
  2. இந்தியாவில் ரூ. 15,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்: மோட்டோ G37 பவர் முதல் போகோ C85 மற்றும் பல
  3. சென்ஹைசர் HD 480 ப்ரோ பிளஸ் விமர்சனம்: அமைதியாகக் கவரும் திறமை
  4. வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு அம்சங்கள்
  5. ஜியோ AI கால் ஏஜென்ட் விளக்கம்: இது என்ன, எப்படி வேலை செய்கிறது, இதன் அம்சங்கள் மற்றும் பல
  6. டால்பி அட்மாஸ், 50W ஸ்பீக்கர்களுடன் ஹேயர் HQLED P7 புரோ ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்
  7. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது, அமேசானில் உள்ள மைக்ரோசைட் வடிவமைப்பை உணர்த்துகிறது
  8. 50MP கேமராவுடன் ரெட்மி டர்போ 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை சலுகைகள்
  9. ஒப்போ ரெனோ 16 உடன் ரெனோ 16c மாடலும் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு: விவரக்குறிப்புகள் கசிந்தன
  10. 6,500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC உடன் விவோ Y6e 5G அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.