சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ் ஸ்மார்ட்போன் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் சாம்சங்கின் இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே, குவாட் கேமரா அமைப்பு மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த சாம்சங் மிட்-ரேஞ் போனில் டால்பி அட்மஸ் ஆடியோ உள்ளது.
Samsung கேலக்ஸி ஏ 21 எஸ்-ன் ஆரம்ப விலை ஜிபிபி 179 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,500) ஆகும். இந்த போன் கருப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் காணப்படும். இந்தியாவில் இந்த போன் கிடைப்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
Samsung Galaxy A21s-ல் 6.5 இன்ச் எச்டி + (720 எக்ஸ் 1600 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 உடன் ஒன் UI-யில் இயங்குகிறது. போனில் ஆக்டா கோர் செயலிகள், 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
இந்த போன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை உள்ளன. செல்ஃபி எடுக்க 13 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.
போனின் உள்ளே பேட்டரி 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பத்துடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்