3 பின்புற கேமரா, 4000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் வெளிவந்த Samsung Galaxy A20s- விலை, சிறப்பம்சங்கள்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 24 செப்டம்பர் 2019 16:19 IST
ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy A20s-யில் 6.5 இன்ச் முழு எச்.டி+ திரை உள்ளது
  • 4,000mAh பேட்டரியை இந்த போன் கொண்டுள்ளது
  • பின்புறம் டிரிபிள் ரியர் கேமரா உள்ளது

பொக்கே எஃபெக்டுக்காக ‘லைவ் ஃபோகஸ்’ ஆப்ஷனுயும் இந்த போனில் உள்ளது. 

சாம்சங் நிறுவனம், தனது கேலக்ஸி A20s ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்த போனை சில நாட்களுக்கு முன்னர்தான் சாம்சங் அறிமுகம் செய்தது. இந்நிலையில் சர்வதேச மார்க்கெட் பலவற்றில் A20s-ஐ வெளியிட்டுள்ளது சாம்சங். சாம்சங்கின் A வரிசை போன்களின் லேட்டஸ்ட் வெர்ஷனாக A20s வந்துள்ளது. கடந்த மாதம்தான் சாம்சங் கேலக்ஸி A30 மற்றும் A50 போன்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

சாம்சங் கேலக்ஸி A20s விலை:

Advertisement

போனை வெளியிட்டாலும், எந்த சந்தையில் எவ்வளவு விலையில் A20s விற்கப்படும் என்பது குறித்து சாம்சங் தகவல் தெரிவிக்கவில்லை. இந்தியாவிலும் அதன் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் இல்லை. அதே நேரத்தில் மலேசியாவில் A20s-ன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனின் விலையானது சுமார் 12,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே விலையில் இந்தியாவிலும் A20s விற்கப்படலாம். கருப்பு, நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். அதே நேரத்தில் நாடுக்கு நாடு போனின் வண்ணங்களில் மாறுதல் இருக்கலாம். 

சாம்சங் கேலக்ஸி A20s சிறப்பம்சங்கள்:

டூயல் நானோ சிம் ஸ்லாட் வசதி கொண்ட A20s, ஆண்ட்ராய்டு 9.0 பைய் மென்பொருள், 6.5 இன்ச் முழு எச்.டி+ திரை, இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் எஸ்.ஓ.சி, 3ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பெற்றிருக்கின்றன. 

Advertisement

கேமராவைப் பொறுத்தவரை, A20s, பின்பறத்தில் மட்டும் டிரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. 13 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் கேமரா, 5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் கேமராக்களை இந்த போன் பெற்றிருக்கின்றது. பொக்கே எஃபெக்டுக்காக ‘லைவ் ஃபோகஸ்' ஆப்ஷனுயும் இந்த போனில் உள்ளது. 

ரியர் மவுன்டெட் ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 4000 எம்.ஏ.எச் பேட்டரி, 15W அதிவேக சார்ஜிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களையும் பெற்றிருக்கிறது A20s. 4G LTE, ப்ளூடூத் 4.2, வை-ஃபை 802.11 b/g/n, வை-ஃபை டைரெக்ட், ஜிபிஎஸ், Glonass, Beidou, மற்றும் Galileo போன்ற இணைப்பு ஆப்ஷன்களும் போனில் உள்ளன.


 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung Galaxy A20s, Samsung Galaxy A20s Specifications
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.