கலக்கல் வசதிகள் கொண்ட சாம்சங் 'கேலக்ஸி ஏ20' ஸ்மார்ட் போன் அறிமுகம்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 19 மார்ச் 2019 15:10 IST
ஹைலைட்ஸ்
  • இரண்டு பின்புற கேமராக்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ20!
  • ஆக்டா கோர் எக்நாஸ் 7884 பிராசஸ்சரை இந்த போன் கொண்டுள்ளது!
  • இந்த தயாரிப்பில் 4,000mAh பேட்டரி பவரை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன், 6.4 இஞ்ச் ஹெச்டி திரை மற்றும் அமோலெட் பேனலை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ வகை போன்களான கேலக்ஸி ஏ50 மற்றும் ஏ30 ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ20 தயாரிப்பு ரஷ்யாவில் வெளியாகியுள்ளது.

ஆக்டா கோர் எக்னாஸ் 7884SoC, இரண்டு பின்புற கேமராக்கள் மற்றும் 4,000mAh பேட்டரி பவரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் சாம்சங்கின் ஆன்லைன் தளம் மற்றும் அத்தோரைசிட் ரீடெயில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் இந்தியாவில் வெளியாகும் தேதி மற்றும் விலை பற்றிய தகவல் ஏதும் இன்னும் கசியவில்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ20 விலை:

ரஷ்யாவில் வெளியாகியுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி ஏ20, சுமார் ரூ.15,000 வரை மதிப்பிடப்படுகிறது. இந்த தயாரிப்பை சாம்சங் பிராண்டின் கடைகள் மற்றும் கூட்டணித் தளங்களில் இருந்து வாங்க முடிகிறது. உலக சந்தைகளில் அறிமுகமாகும் தேதி பற்றிய எவ்வித தகவலும் சாம்சங் தளத்தில் இடம் பெறவில்லை.

Advertisement

சாம்சங் கேலக்ஸி ஏ20 அமைப்புகள்:

6.4 இஞ்ச் ஹெச்டி திரை கொண்ட அமோலெட் பேனல் இந்த போனின் சிறப்பம்சமாகும். ஆக்டா கோர் எக்னாஸ் 7884SoC, வட்டர் டிராப் நாட்ச், 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி ஆகியவை போனுக்குக் கூடுதல் சிறப்புகளை சேர்க்கின்றன.

கேமரா வசதியைப் பொறுத்தவரை இந்த போனில் இரண்டு பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 13 மற்றும் 5 மெகா பிக்சல் கேமராக்கள் இந்த போனின் பின்புறத்தில் அமைந்துள்ள நிலையில் முன்புறத்தில் செல்ஃபிக்காக 8 மெகா பிக்சல் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement

பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மற்றும் சாம்சங் பே-விற்கான வசதி போன்ற பல சிறப்பு வசதிகளும் இந்த போனில் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த போனில் 4,000mAh பேட்டரி மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி போன்றவை இருக்கின்றன.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.