ஆப்பிள், குவால்காமுக்கு செம டஃப்! சாம்சங்கின் 2nm எக்ஸினோஸ் 2600 வந்தாச்சு

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 19 டிசம்பர் 2025 17:14 IST
ஹைலைட்ஸ்
  • உலகின் முதல் 2nm GAA (Gate-All-Around) தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ச
  • 113% மேம்படுத்தப்பட்ட ஜெனரேட்டிவ் AI பெர்பார்மன்ஸ் மற்றும் 10-கோர் CPU
  • ஹீட்டிங் பிரச்சனையைத் தீர்க்க 'Heat Path Block' (HPB) எனும் புதிய கூலி

Samsung Exynos 2600 அறிமுகம்: 2nm GAA, Xclipse 960 GPU, 320MP கேமரா ஆதரவு

Photo Credit: Samsung

இன்னைக்கு டெக் உலகமே ஆச்சரியமா பார்க்குற ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை சாம்சங் (Samsung) வெளியிட்டுருக்காங்க. அதுதான் அவங்களோட லேட்டஸ்ட் அண்ட் பவர்ஃபுல் சிப்செட்டான Exynos 2600. இதுவரைக்கும் ஸ்மார்ட்போன் உலகத்துல 3nm சிப்செட்கள் தான் டாப்-ல இருந்துச்சு, ஆனா இப்போ முதல் முறையா 2nm GAA (Gate-All-Around) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சிப்பை சாம்சங் தயாரிச்சிருக்காங்க.

இந்த எக்ஸினோஸ் 2600-ல இருக்குற சிபியு (CPU) பத்தி பார்த்தா, இது ஒரு 10-கோர் (Deca-core) ப்ராசஸர். இதுல ஒரு C1-Ultra core (3.8GHz), மூணு C1-Pro cores (3.25GHz), அப்புறம் ஆறு C1-Pro cores (2.75GHz) இருக்கு. பழைய மாடலை விட இதோட வேகம் 39% அதிகமா இருக்கும்னு சாம்சங் சொல்லிருக்காங்க. முக்கியமா, இதுல 'லிட்டில் கோர்ஸ்' (Little Cores) அப்படின்னு சொல்லப்படுற சின்ன கோர்களை தூக்கிட்டு, எல்லாமே பவர்ஃபுல் கோர்களா வச்சிருக்காங்க.

கேமிங் பிரியர்களுக்கு ஒரு செம விருந்தா?

இதுல Xclipse 960 GPU இருக்கு. இது AMD RDNA 3 ஆர்க்கிடெக்ச்சர்ல உருவானது. இதனால 'ரே டிரேசிங்' (Ray Tracing) பெர்பார்மன்ஸ் 50% அதிகமா இருக்கும். அதுமட்டும் இல்லாம, 'Exynos Neural Super Sampling' (ENSS) அப்படிங்கிற AI தொழில்நுட்பம் மூலமா, கம்மி பவர்ல கூட கேம்ஸ் எல்லாம் செம ஸ்மூத்தா ஓடும்.

எக்ஸினோஸ்னாலே ஹீட் ஆகும்னு சொல்றவங்களுக்காகவே 'Heat Path Block' (HPB) அப்படிங்கிற ஒரு புது டெக்னாலஜியை கொண்டு வந்திருக்காங்க. இது போனோட வெப்பத்தை 16% வரைக்கும் குறைச்சு, எவ்வளவு நேரம் கேம் விளையாடினாலும் போனை கூலா வச்சுக்கும். ஏஐ (AI) விஷயத்துலயும் இது ஒரு கில்லி! இதோட NPU மூலமா ஜெனரேட்டிவ் AI வேலைகள் 113% வேகமா நடக்கும்.

கேமராவை பொறுத்தவரை, இது 320MP வரைக்கும் இருக்குற கேமராக்களை சப்போர்ட் பண்ணும். 8K 30fps வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 4K 120fps வீடியோ எடுக்குற வசதியும் இதுல இருக்கு. வரப்போற Galaxy S26 மற்றும் S26 Plus மொபைல்கள்ல இந்த சிப்செட்டை நாம எதிர்பார்க்கலாம். மொத்தத்துல, எக்ஸினோஸ் மேல இருக்குற எல்லா நெகட்டிவ் விமர்சனங்களையும் இந்த 2600 மாடல் மாத்திடும்னு சாம்சங் ரொம்பவே நம்பிக்கையா இருக்காங்க.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Exynos 2600, Samsung Exynos 2600 features, GAA processor

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிள் கார்பிளேயில் சாட்ஜிபிடி அறிமுகம்; ஆனால் நேவிகேஷன் மற்றும் நேரலை இருப்பிடத் தகவலை அணுக முடியாது.
  2. ஆப்பிள் 50வது ஆண்டு விற்பனை: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ரூ. 1,02,900 விலையில்; ஐபேட், வாட்ச் மாடல்களுக்கும் சலுகைகள்
  3. ஒன்பிளஸ் நார்டு 6 (OnePlus Nord 6) - முதல் பார்வை
  4. ஒப்போ F33, ஒப்போ F33 ப்ரோ அறிமுகக் காலம் மற்றும் விலை விவரங்கள் வெளியாகியுள்ளன
  5. ஏப்ரல் மாத பிஎஸ் பிளஸில் லார்ட்ஸ் ஆஃப் தி ஃபாலன்,டோம்ப் ரைடர் மற்றும் ஸ்வார்ட் ஆர்ட் ஆன்லைன் கேம்கள் இணைகின்றன.
  6. கூகுள் AI ப்ரோ திட்டத்தில் கூடுதல் கட்டணமின்றி 5TB கிளவுட் ஸ்டோரேஜ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  7. DarkSword பாதிப்பை சரிசெய்ய, iOS 18-ல் இயங்கும் பழைய ஐபோன்களுக்கு ஆப்பிள் அவசர அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
  8. ரெட்மி நோட் 15 SE 5G இந்தியாவில் அறிமுகம்: 5,800mAh பேட்டரி, வேகன் லெதர் ஃபினிஷ்: விலை, சிறப்பம்சங்கள்
  9. Realme 16 5G இந்தியாவில் அறிமுகம்: 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா: விலை, சிறப்பம்சங்கள்
  10. விவோ V70 FE இந்தியாவில் அறிமுகம்: 7,000mAh பேட்டரி, 200MP கேமரா; விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.