சாம்சங் கேலக்ஸி ஏ 51-ல் புதிய வேரியண்ட் அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 28 மே 2020 10:00 IST
ஹைலைட்ஸ்
  • இந்த போன் 8 ஜிபி ரேம்-ல் கிடைக்கிறது
  • மூன்று வண்ணங்களில் விற்கப்படும்
  • போனில் 48 மெகாபிக்சல் கேமரா உள்ளது

சாம்சங் கேலக்ஸி ஏ 51 ஜனவரி பிற்பகுதியில் இந்தியாவில் ஒற்றை, 6 ஜிபி ரேம் ஆப்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டது

சாம்சங் கேலக்ஸி ஏ 51 இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜனவரி 2020 முதல் மார்ச் வரை, உலகளவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் இதுவாகும். அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் இந்த தொலைபேசி 6 ஜிபி ரேம் கொண்டிருந்தது. இந்த முறை சாம்சங் இந்த போனை 8 ஜிபி ரேம்-க்கு கொண்டு வந்துள்ளது. இந்த போனில் இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளே உள்ளது. போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. 


போனின் விலை:

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Samsung Galaxy A51 விலை இந்தியாவில் ரூ.27,999 ஆகும். இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.

போனின் விவரங்கள்:

டூயல்-சிம் சாம்சங் கேலக்ஸி ஏ 51 நிறுவனத்தின் ஒன்யூஐ 2.0 உடன் Android 10-ல் இயங்கும். இந்த போனில் 6.5 இன்ச் சூப்பர் அமோலேட் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஒரு எக்ஸினோஸ் 9611 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 51 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களை எடுக்க 32 மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 51-ல் 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளது.


Is Samsung Galaxy A51 a worthy Redmi K20 Pro rival? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Clean, feature-rich software
  • Good battery life
  • Bad
  • Biometric authentication isn’t very quick
  • Underwhelming performance for the price
  • Average low-light camera performance
 
KEY SPECS
Display 6.50-inch
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் கேலக்ஸி A57 5G, கேலக்ஸி A37 5G: இந்தியாவில் விலை மற்றும் சலுகைகள் அறிவிப்பு
  2. ஏற்கனவே பதிவேற்றிய கோப்புகளை எளிதாகப் பயன்படுத்த சாட்ஜிபிடியில் புதிய அம்சம் அறிமுகம்
  3. கூகுள் டிவி-க்கான ஜெமினி மேம்பாடு: நேரலை விளையாட்டு ஸ்கோர்கார்டுகள் மற்றும் ஊடாடும் கல்வி காட்சிகள் அறிமுகம்
  4. ஜெமினியில் 3D அவதார் அம்சத்தைச் சேர்க்க கூகுள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்
  5. பிரபலமான 'சோரா' AI வீடியோ செயலியை மூடுகிறது ஓபன்ஏஐ; டிஸ்னியுடனான மெகா ஒப்பந்தமும் முறிவதாகத் தகவல்
  6. தாய்லாந்தின் NBTC சான்றிதழ் தளத்தில் சியோமி 17T ப்ரோ: விரைவில் சர்வதேச அளவில் அறிமுகம்
  7. முழுத்திரை வசதி கொண்ட ஐபோன் 20 இல்லையா? ஆப்பிளின் 20-வது ஆண்டு மாடலில் அதன் மிக முக்கிய அம்சம் ஏன் இடம் பெறாமல் போகலாம்?
  8. ஐபோன்களுக்கான iOS 26.4 அப்டேட்: ஆப்பிள் மியூசிக்கில் AI மூலம் உருவாக்கப்பட்ட பிளேலிஸ்ட்கள் மற்றும் 8 புதிய எமோஜிகள்
  9. சாம்சங் கேலக்ஸி S27 அல்ட்ராவில் டிஜிடைசருடன் கூடிய 'S Pen' ஆதரவு தொடர்ந்து இடம்பெறும்
  10. இந்தியாவில் வெளியாகும் முன்பாக ரியல்மி 16 5G பேட்டரி திறன், நிறங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் வெளியீடு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.