சாம்சங் கேலக்ஸி ஏ-21 என்ற தனது அடுத்த ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் நாளை மறுதினமான ஜூன் 17 அன்று வெளியிடவுள்ளது. ஏற்கனவே இந்த போன் கடந்த மாதம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் நாளை மறுதினம் இந்தியாவில் வெளியிடப்படுகிறது. ஏ 21 –ல் 5,000 ஆம்ப் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது 15 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கு இந்த போன் சப்போர்ட் செய்யும்.
இங்கிலாந்தில் 179 பவுண்டுக்கு இந்த போன் விற்பனை செய்யப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 17 ஆயிரம்.
இந்தியாவில் அதே விலை அல்லது அதற்கு குறைவான விலையில் இந்த ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லான்ச் செய்யப்பட்ட அன்றே விற்பனை தொடங்குமா என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Awesomeness that goes on and on! The new Samsung #GalaxyA21s is coming your way. Follow this space to know more. #Samsung pic.twitter.com/YOuShYFeIF
— Samsung India (@SamsungIndia) June 15, 2020
கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ 21 வடிவமைக்கப்பட்டுள்ளது.
6.5 இன்ச் டிஸ்ப்ளே அதாவது 720•1,600 பிக்ஸல் அளவு கொண்ட டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 உடன் 3 ஜிபி ரேம் 32 ஜி.பி. இன்பீல்டு மெமரி ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். மெமரியை 512 ஜிபி வரையில் அதிகப்படுத்த முடியும்.
48 மெகாபிக்சல் கொண்ட இதன் கேமரா போட்டோ பிரியர்களை திருப்திபடுத்தும். 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு கேமரா, இரு 2 மெகா பிக்சல் கேமரா ஆகியவை தரமான புகைப்படங்களை எடுத்துத் தரும்.
மொத்தம் 191 கிராம் எடை கொண்டதாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ 21 சந்தைக்கு வரவுள்ளது.
பக்காவான கேமரா பலமான பேட்டரி மற்றும் சார்ஜ் வசதிகள் ஆகியவை இந்த போனுக்கு பலம் சேர்க்கின்றன. பட்ஜெட் ஸ்மார்ட் போன் பிரியர்களை இந்த மொபைல் திருப்திபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்