Redmi Note 9 போனின் புது வேரியன்ட்... நேரடியாக விற்பனைக்கு வருகிறது!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 23 ஜூலை 2020 17:06 IST
ஹைலைட்ஸ்
  • Redmi Note 9 Scarlet Red will on sale from August 6
  • It will be available for purchase via Amazon
  • Redmi Note 9 Scarlet Red variant starts at Rs. 11,999

அமேசான் பிரைம் டே சேலில், ரெட்மி நோட் 9 சிவப்பு வேரியன்ட் மாடல் விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட்டது. மொத்தம் மூன்று விதமான நிற வேரியன்டுகள் காட்டப்பட்டன. அவை, அக்வா கிரீன், ஆர்க்டிக் ஒயிட் மற்றும் பெப்பிள் கிரே ஆகும். இந்த மூன்று வேரியன்டுகளும் நாளை (ஜூலை 24) விற்பனைக்கு வருகிறது.

நான்காவதாக ஒரு வெரியன்ட் இருந்த்து. ஆனால், அது அறிமுகம் செய்யப்படவில்லை. வெறும் டீசர் மட்டும் லீக்கானது. அந்த வேரியன்ட் சிவப்பு நிற வண்ணத்தில் இருந்தது. அதாவது ஸ்கார்லெட் ரெட் வேரியன்ட்.  இந்த நிலையில், ரெட்மி நோட் 9 ஸ்கார்லெட் சிவப்பு வேரியன்ட் ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமேசானின் பிரைம் டே சேல் நடைபெறுகிறது. இந்த சேலில்தான் ரெட்மி நோட் 9 ஸ்கார்லட் ரெட் வேரியன்ட் விற்பனைக்கு வருகிறது. இது புதிய வேரியன்ட் மட்டுமே. மற்றபடி, விலை, சிறப்பம்சங்கள் அனைத்தும் இதர ரெட்மி நோட் 9 மாடலில் உள்ளபடியாகும்.

ரெட்மி நோட் 9 விலை:
4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை 11,999 ரூபாய் என்றும், 4ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 13,499 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, 6ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 14,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எப்படி வாங்கலாம்?
நாளை (ஜூலை 24) மதியம் 12 மணிக்கு ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை mi.com, அமேசான், Mi ஹோம் ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் வாங்கிக் கொள்ளலாம். 

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள்:
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.53 இன்ச் 
ப்ரொடக்ஷன்: கார்னிங் கொரிலா கிளாஸ் 5
பிராசசர்: மீடியாடெக் ஹூலியோ G85 SoC

கேமரா:
செல்ஃபி கேமரா: 13 மெகா பிக்சல்
பிரைமரி கேமராக்கள்: நான்கு
சாம்சங் ஐசேசெல் பிரைட் GM1 சென்சாருடன் கூடிய 48 MP பிரைமரி கேமரா
f/2.2 அல்ட்ரா வைட் லென்ஸ் கொண்ட 8 MP செகன்டரி கேமரா
f/2.4 அப்பாச்சர் மக்ரோ லென்ஸ் கொண்ட 2MP கேமரா
f2/4 லென்ஸ் கொண்ட 2MP டெப்த் சென்சார் கேமரா

இதுதவிர 5,020 mAh பேட்டரி, USB டைப் சி போர்ட், 22.5 W சார்ஜர், 3.5mm இயர்போன், 9W ரிவர்ஸ் சார்ஜிங், இன்ப்ரா ரெட், பிராக்ஸிமிட்டி சென்சார், அசிலேரோமீட்டர் சென்சார், லைட் சென்சார், விரல் ரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. 
 


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Powerful processor
  • Decent daylight camera performance
  • Bad
  • Average low-light camera performance
  • Bloated UI and spammy notifications
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G85
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5020mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.