Xiaomi, ஏப்ரல் 30 அன்று உலகளாவிய நிகழ்வுகளில் Redmi Note 9-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 9 சீரிஸின் புதிய ஸ்மார்ட்போனாகும். முன்னதாக, இந்த சீரிஸில் ரெட்மி நோட் 9 புரோ, ரெட்மி நோட் 9 எஸ் மற்றும் ரெட்மி நோட் 9 மேக்ஸ் ஆகியவற்றை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரெட்மி நோட் 9-ஐ உலக சந்தையில் அறிமுகப்படுத்தியதிலிருந்து, நிறுவனம் இந்தியாவுக்கு வருவது குறித்து எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், இப்போது இந்த சாதனத்தின் இந்திய வேரியண்ட் வைஃபை அலையன்ஸ் இணையதளத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது ரெட்மி நோட் 9 விரைவில் இந்தியாவுக்கு வரக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
ரெட்மி நோட் 9 வைஃபை அலையன்ஸ் பட்டியலை முகுல் சர்மா கண்டறிந்தார். மாடல் எண் M2003J15SI உடன் ரெட்மி நோட் 9-ன் இந்திய வேரியண்ட் வைஃபை அலையன்ஸ் இணையதளத்தில் வெளிவந்துள்ளது என்று டிப்ஸ்டர் ட்வீட் செய்துள்ளார். போனி இருந்து இந்த சான்றிதழைப் பெற்ற பிறகு, இப்போது அதை விரைவில் இந்தியாவிலும் காணலாம்.
Photo Credit: Wi-Fi Alliance
3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 9, உலக சந்தையில் $ 199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,100)-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை $ 249 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,900) ஆகும். இந்த போன், கிரீன், ஒயிட், கிரே கலரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதன் இந்திய விலை குறித்து எந்த தகவலும் இல்லை.
டூயல்-சிம் கொண்ட ரெட்மி நோட் 9, ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11-ல் இயங்குகிறது. இது 6.53 அங்குல முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே மீடியா டெக் ஹீலியோ ஜி 85 செயலி உள்ளது.
இந்த போன் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். போனில் 13 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது.
ரெட்மி நோட் 9-ன் உள்ளே 5,020 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கைரேகை சென்சார் போனின் பின்புறத்தில் உள்ள கேமரா தொகுதிக்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்