Photo Credit: Twitter/ Redmi India
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனானது, ஜூலை 20ம் தேதி பிற்பகல் 12 மணி அளவில் விற்பனைக்கு வர உள்ளதாக சியோமி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளதாக சியோமி நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது. எனினும் தேதி தெரிவிக்காமல் அந்த விளம்பரம் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரெட்மி இந்தியாவின் ட்வீட்டில் உள்ள படத்தின் இருபுறமும் “ரெட்மி” மற்றும் “நோட்” என்பதுடன் நடுவில் “9” என்ற ஒரு ‘சாம்பியன்ஷிப் பெல்ட்டை' காட்டுகிறது. இது எதைக் குறிக்கிறது என்பதை யூகிக்கும்படி ரசிகர்களைக் கேட்டாலும், அது உண்மையில் ரெட்மி நோட் 9 என்பதை படம் தெளிவுபடுத்தியது.
3 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு விருப்பத்திற்கு $199 (தோராயமாக ரூ.14,900) மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கு 9 249 (தோராயமாக ரூ.18,650) என்ற விலையுடன் ரெட்மி நோட் 9 ஏப்ரல் மாதத்தில் உலகளவில் வெளியிடப்பட்டது.
இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான MIUI 11ல் இயங்குகிறது. இது 6.53இன்ச் முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஒற்றை செல்ஃபி ஷூட்டருக்கான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 5,020 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது, இதில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
Poco M2 Pro: Did we really need a Redmi Note 9 Pro clone? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்