நோட் 7-ஐ அடுத்து 'நோட் 8', ரெட்மீயின் புதிய அப்டேட்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 6 ஆகஸ்ட் 2019 12:06 IST
ஹைலைட்ஸ்
  • நோட் 8 தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக சியோமி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது
  • அது சியோமியின் புதிய கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கலாம்
  • இதில் மீடியாடெக் ஹீலியோ G90T எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது

சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் 'நோட் 8' ஆக இருக்கலாம்

ரெட்மி நோட் 8 தயாரிப்பில் சியோமி நிறுவனம் ஈடுபட்டுள்ளது, மேலும் மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமியின் ரெட்மீ தலைவரான லு வெயிபிங்தான், தனது வெய்போ கணக்கில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். M1906GT என்ற மாடல் பெயருடன் இந்த அறியப்படாத ரெட்மி ஸ்மார்ட்போன் ஒரு சான்றிதழ் தளத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன - இது இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் 64 மெகாபிக்சல் ரெட்மி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் அல்லது ஆவலாக எதிர்பார்க்கப்படும் மீடியாடெக்கின் புதிய ஹீலியோ G90T எஸ் ஓ சி ப்ராசஸரால் இயக்கப்படும் கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரெட்மீயின் போது மேலாளர் லூ வெய்பிங் வெளியிட்ட இந்த தகவல் ரெட்மீ நோட் 8 ஸ்மார்ட்போனைத்தான் குறிக்கிறது, மேலும் தற்போது போட்டியில் உள்ள ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் ஐடிஹோம் என்ற சீன வெளியிட்டகம் தகவல் வெளியிட்டுள்ளது. முன்னதாக, சியோமி நிறுவனம் மீடியாடெக்கின் புதிய ப்ராசஸர் கொண்டு ஒரு கேமிங் ஸ்மார்ட்போனின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரத்தில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 64 மெகாபிக்சல் ஸ்மார்ட்போனாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தளத்தில், இந்த சியோமியின் 'M1906GT' மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளதாக மைட்ரைவர்ஸ் (MyDrivers) தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் அங்கு இடம்பெறவில்லை. இந்த ரெட்மீ ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் ஸ்மார்ட்போனா, நோட் 8 ஸ்மார்ட்போனா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Redmi, Redmi Note 8, MediaTek Helio G90T, M1906GT

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஐபோன் 18 சீரிஸ் விலை உயர்வு முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும்!
  2. சாம்சங் கேலக்ஸி A27 5G அறிமுகம்: ஸ்னாப்டிராகன் சிப், 6.7-இன்ச் திரை மற்றும் சலுகைகள்!
  3. ஆப்பிள் விலை உயர்வு: மேக், ஐபேட் விலை அதிகரிப்பு, ஐபோன்களுக்கு விலக்கு
  4. Oppo Reno 16 முதல் பார்வைகள் (First Impressions)
  5. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் அறிமுகம்: 52dB ANC மற்றும் 54 மணிநேர பேட்டரி லைஃப்
  6. லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 5,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  7. வாட்ஸ்அப் நிறுவனம் தெரியாத எண்களிலிருந்து வரும் அரட்டைகள் (Chats) குறித்து பயனர்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது
  8. அமேசான் இந்தியாவின் விரைவு வர்த்தகம் 300 நகரங்களுக்கு விரிவாக்கம்; பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டம் அறிமுகம்!
  9. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
  10. ஜூன் 29 இந்திய அறிமுகத்தை உறுதி செய்தது சாம்சங் கேலக்ஸி M47 5G; முக்கிய அம்சங்கள் கசிவு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.