ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை உறுதி செய்த சியோமி அதிகாரி!

விளம்பரம்
Edited by Murali S, மேம்படுத்தப்பட்டது: 19 ஆகஸ்ட் 2019 17:55 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி நோட் 8 64 மெகாபிக்சல் கேமராவை கொண்டிருக்கலாம்
  • 4,000mAh அதிகமான அளவு பேட்டரியுடன் எதிர்பார்க்கப்படுகிறது
  • ரெட்மி நோட் 7-ஐ விட அதிக திரை-உடல் விகிதம் கொண்டிருக்கும்

இந்த ஸ்மார்ட்போன் 4 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது

Photo Credit: SlashLeaks

சில நாட்கள் முன்பு, ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் குறித்த சில தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது. அதன்படி, சியோமியின் துணை நிறுவனத்தை சேர்ந்த இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் கேமராவுடன் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. தற்போது, இந்த ஸ்மார்ட்போனின் சிற்ப்பம்சங்கள் குறித்த மேலும் சில தகவல்களை சியோமி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் வெளியிட்டிருக்கிறார். அதிக திரை-உடல் விகிதம், முந்தைய ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் அதிக பேட்டரி அளவு, அனைத்திற்கும் மேலாக அதிக புகைப்படத் தரம் என அனைத்து சிறப்பம்சங்களும் இதில் அடங்கும். அனைத்திற்கும் மேலாக கருப்பு நிற வண்ணத்திலான இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

முதலாவதாக இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள், இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டுள்ளது என்பதுதான். முன்னதாக் லூ வெய்பிங் இந்த புதிய ரெட்மீ ஸ்மார்ட்போன் 4 பின்புற கேமராக்களுடன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கும் என ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், இந்த கேமரா சென்சார் சாம்சங் ஐசோசெல் ப்ரைட் GW1 சென்சாராக இருக்குமா என்ற தகவலை சியோமி நிறுவனம் சமீபத்தில்தான் உறுதி செய்திருந்தது.

கூடுதலாக ரெட்மியின் நிர்வாக இயக்குனர், இந்த ஸ்மார்ட்போன் நீடித்த பேட்டரி அளவை கொண்டிருக்கும் என குறிப்பிட்டிருந்தார். அதன்படி, முந்தைய ஸ்மார்ட்போன்களில் உள்ள 4000mAh பேட்டரியை விட அதிக அளவு பேட்டரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரெடீ நோட் 7-ஐ விட அதிக திரை- உடல் விகிதம் கொண்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த ஸ்மார்ட்போன் சிறிய நாட்ச் டிஸ்ப்ளே அல்லது முழு திரையுடன் பாப்-அப் செல்பி கேமரா கொண்டு அறிமுகமாகலாம்.

ஆகஸ்ட் 29 அன்று சீனாவில் அறிமுகமாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனுடன், வெய்பிங் ஒரு 70-இன்ச் டிவியும் அறிமுகமாகும் என்பதை உறுதி செய்துள்ளார். அந்த டிவிக்கான டீசரும் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஆடியோ ஜாக், டைப்-C சார்ஜர் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.