Photo Credit: Twitter/ Manu Kumar Jain
வருகின்ற மே 20 அன்று, இந்தியாவில் 48 மெகாபிக்சல் கேமராவுடன் ரெட்மீ நோட் 7S ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, சில டீசர்களின் வழியாக இந்தியாவில் வெகுவிரைவில், 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளதாக ரெட்மீ நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், அந்த ஸ்மார்ட்போன் என்னவாக இருக்கும் என பல எதிர்பார்ப்புகள் வெளியாகின.
ஆனால், அந்த ஸ்மார்ட்போன் ரெட்மீ நோட் 7S தான் என்ற தகவலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சியோமி நிறுவனம். 48 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்ட இந்த ரெட்மீ நோட் 7S, ரெட்மீ நோட் 7 Pro-வை போன்றே அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமான ரெட்மீ நோட் 7 Pro-வை விட சில சிறந்த அம்சங்களை கொண்டு, அதற்கு அடுத்த மெம்படுத்தப்பட்ட மாடலாக கூட இந்த ஸ்மார்ட்போன் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன், புதன்கிழமையான நேற்று இந்த ரெட்மீ நோட் 7S பற்றி வெளியிட்ட தகவலில், 48 மெகாபிக்சல் கேமரா கொண்டு, இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது, ரெட்மீ நோட் தொடரின் அடுத்த ஸ்மார்ட்போன். மேலும் அவர் பதிவிட்டிருந்த அந்த ட்விட்டர் பதிவு, இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில், வருகின்ற மே 20 தேதி வெளியாகவுள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளது.
இந்த ரெட்மீ நோட் தொடரில், ரெட்மீ நோட் 7S புதியதாக அறிமுகமாகவுள்ள நிலையில், ரெட்மீ நோட் 7 Pro மற்றும் ரெட்மீ நோட் 7 என இரண்டு மாடல்கள் சமீத்தில் வெளியாகி, இன்னும் சந்தையில் வெற்றிகரமாக விற்பனையாகிக்கொண்டிடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மெலும், இந்த ரெட்மீ நோட் 7S ஸ்மார்ட்போன், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் பொதுவானதாக ஒரு அமைப்பு கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனு குமார் ஜெய்னின் ட்விட்டர் பதிவின்படி இந்த ஸ்மார்ட்போன் இரண்டு பின்புற கேமராக்கள் கொண்டு வெளியாகவுள்ளது என்பது உறுதியாகி உள்ளது. ஒரு கேமரா 48 மெகாபிக்சல் கொண்டிருக்கும் என்று கூறியிருந்தாலும், மற்றொரு கேமரா பற்றிய தகவல் வெளியாகமலேயே உள்ளது.
இந்த ரெட்மீ நோட் 7S மட்டுமின்றி ரெட்மீ நிறுவனம், மூன்று பின்புற கேமரா கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, ஒரு ட்விட்டர் பதிவில் கூறியிருந்தது. மேலும் அந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 730 அல்லது ஸ்னேப்ட்ராகன் 730G கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை டீசர்கள் வாயிலாகவும் உறுதி செய்துள்ளது இந்த நிறுவனம்.
முன்னதாக, இந்த ஆண்டின் துவக்கத்தில், பிப்ரவரி மாதம் ரெட்மீ நோட் 7 Pro, அறிமுகம் செய்யப்பட்டது என்றும், அது இந்த வாரத்தின் துவக்கத்தில் 20 லட்சம் என்ற எண்ணிக்கையிலான விற்பனையை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ரெட்மீ நோட் 7S-ன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், ரெட்மீ நிறுவனம், இது குறித்த தகவல்களை பின்வரும் நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்