மூன்றே வாரத்தில் ரெட்மி ‘நோட் 7’ செய்த சாதனை..!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 13 பிப்ரவரி 2019 12:29 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மீ நோட் 7 ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது
  • ஜனவரி 15 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது.
  • இந்தியாவில் ரெட்மீ நோட் 7 அறிமுக தேதி இன்னும் வெளியாகவில்லை

இந்தியாவில் 'ரெட்மீ நோட்7'னின் அறிமுக தேதி இன்னும் வெளியாகவில்லை!

சுமார் 1 மில்லியன் 'ரெட்மீ நோட் 7' ஸ்மார்ட்போன்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ரெட்மீ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லூ வெய்பிங், வெய்போவில் தெரிவித்துள்ளார். 

சியோமி நிறுவனத்துடன் இணைந்து ரெட்மீ பைய் சியோமி என்ற கூட்டணியில் வெளியிடப்பட்ட முதல் தயாரிப்பாக இருக்கும் 'ரெட்மீ நோட் 7' ஸ்மார்ட்போன், கடந்த மாதம் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. 
அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த வாரமே விற்பனைக்கு வெளியாகிய இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே விற்பனைக்கு வந்தது. அங்கு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்திய வாடிக்கையாளர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

விற்பனைக்கு வெளியாகி மூன்று வாரங்களே ஆகியுள்ள நிலையில் சியோமி ரெட்மீயின் இந்த புதிய தயாரிப்பு விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

6.3 இஞ்ச் ஹெச்டி திரை, குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி மற்றும் 4,000 mAh பேட்டரி பவர் என்ற பல சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில்  வெளியானது. 

விலைப் பட்டியலை பொறுத்தவரை இந்த ரெட்மீ நோட் 7 மூன்று வகைகளாக வெளியாகின. அதன்படி 3ஜிபி ரேம்/ 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூபாய் 10,300க்கும், 4ஜிபி ரேம்/ 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மற்றோரு வகை ரூபாய் 12,400க்கும் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதே தயாரிப்பில் 6ஜிபி ரேம்/ 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட தயாரிப்பு ரூபாய் 14,500க்கு வெளியானது. அதேபோல் 6ஜிபி ரேம்/ 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகையும் மற்ற மாடல்கள் வெளியான சில நாட்களுக்குப் பிறகு அந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சியோமியின் இந்தியாவுக்கான நிர்வாகத் தலைவர் மனு குமார் ஜெயின், 'ரெட்மீ நோட் 7 இந்தியாவிலும் வெளியாகும். அதன் வெளியீட்டுத் தேதியை குறிப்பிட முடியாது' எனத் தகவல் கொடுத்துள்ளார். மேலும் அவர் 'கேட்ஜெட்ஸ் 360'க்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ரெட்மீ நோட் 7 இந்தியாவில் வெளியாகும்போது அது பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.

48 மெகா பிக்சல் கேமரா மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சியோமி மற்றும் ரெட்மீ தயாரிப்பு போன்களிலேயே அதிக எதிர்பார்பைப் பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல்.
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Smooth app and UI performance
  • Good battery life
  • Bright and sharp display
  • Shoots decent images in good light
  • Bad
  • Hybrid dual-SIM slot
  • Fast charger not bundled
  • Preinstalled bloatware
  • Average low-light camera quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ரெனோ 15A 5G 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  2. அமேசான் பிரைம் டே 2026 விற்பனை தேதிகள் அறிவிப்பு, பிரைம் மெம்பர்ஷிப் விலை ரூ. 999 ஆகக் குறைந்தது
  3. அடுத்த பிளாக்ஷிப் போன்களுக்காக எக்ஸினோஸ் 2700 உருவாக்கத்தை சாம்சங் நிர்வாகி உறுதிப்படுத்தியதாக தகவல்
  4. மெமரி சிப் பற்றாக்குறைக்கு மத்தியில் ஐபோன், மேக் விலைகளை ஆப்பிள் உயர்த்தக்கூடும், டிம் குக் கூறுகிறார்
  5. ஒன்பிளஸ் Nord CE 6 போன்ற அதே பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் N6
  6. ஆண்ட்ராய்டு ஹோம் ஸ்கிரீன் மூலம் விரைவாக அணுக வாட்ஸ்அப் வாய்ஸ் நோட் விட்ஜெட்டில் வேலை செய்கிறது
  7. கூகுளின் ஆண்ட்ராய்டு 17 அப்டேட் இந்த பிக்சல் சாதனங்களுடன் இணக்கமானது: முழுமையான பட்டியலைப் பார்க்கவும்
  8. ஜெமினி, கிளாட் வளர்ச்சியால் சாட்ஜிபிடி சந்தைப்பங்கு முதல்முறையாக 50% கீழ் சரிந்தது
  9. கேலக்ஸி போன்களுக்கு AI செல்லப்பிராணி சுகாதார கருவியை விவாடெக் 2026 இல் அறிமுகம் செய்தது சாம்சங்
  10. மோட்டோரோலா ரேஸர் ஃபோல்டு மதிப்பாய்வு:இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகச்சிறந்த முதல் தலைமுறை மடிக்கக்கூடிய போனா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.