MIUI 11 அப்டேட் பெறும் Redmi Note 7 Pro!

MIUI 11 அப்டேட் பெறும் Redmi Note 7 Pro!

Redmi Note 7 Pro பயனர்கள் புதிய அப்டேட்டைப் பெறுகின்றனர்

ஹைலைட்ஸ்
  • புதிய அப்டேட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு MIUI 11.05.0.PFHINXM
  • Dynamic Clock, புதிய UI ஆகிய அம்சத்தைக் கொண்டுவருகிறது MIUI 11
  • இப்போது சில பயனர்கள் மட்டுமே புதிய அப்டேட்டப் பெறுகின்றனர்
விளம்பரம்

Redmi Note 7 Pro பயனர்கள் இப்போது MIUI 11 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளனர். புதிய MIUI 11 Global Stable ROM இந்தியாவில் நடந்த Redmi Note 8 Pro நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. இந்த அப்டேட்டை Redmi K20 முதன்முதலில் பெற்றது. 

Xiaomi Redmi Note 7 Pro பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் MIUI 11 அப்டேட்டைப் பெறுவதற்கான ஸ்கிரீன் ஷாட்களை பதிவிடுகிறார்கள். இந்த ஸ்கிரீன் ஷாட்களில் உள்ள சேஞ்ச்லாக் சிறிய விவரங்களை அளிக்கிறது. ஆனால் ஜியோமி MIUI 11 உடன் வரும் அனைத்து பெரிய அம்சங்களையும் முன்னிலைப்படுத்தியுள்ளது. ஸ்கிரீன் ஷாட்களின்படி, MIUI 11 அப்டேட் 746MB டேட்டாவாக இருக்கிறது. மேலும், அக்டோபர் பாதுகாப்பு இணைப்பையும் (October security patch) கொண்டு வருகிறது. ஜியோமி இன்னும் மன்றங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை அல்லது பதிவிறக்க இணைப்புகளை வழங்கவில்லை. ரோல்அவுட்டை உறுதிப்படுத்த நாங்கள் ஜியோமியை அணுகியுள்ளோம், அடுத்த அறிவிப்பு வந்தவுடன் இந்த இடத்தை புதுப்பிப்போம்.

உங்கள் Redmi Note 7 Pro-வில் புதிய புதுப்பிப்பு வந்துவிட்டதா என்பதைப் பார்க்க About Phone > System Update-ற்குச் சென்று சரிபார்க்க பரிந்துரைக்கிறோம். உங்களுக்கான அப்டேட் வந்திருந்தால், தொலைபேசி சார்ஜில் இருக்கும் போது, அதை நல்ல வைஃபை இணைப்பின் கீழ் இன்ஸ்டால் செய்யவும்.

MIUI 11 புதிய அம்சங்களில் புதிய minimalistic design, புதிய dynamic sound effects, புதிய MI File Manager app, Floating Calculator, Steps Tracker மற்றும் பல உள்ளன. Dynamic Clock, Kaleidoscope effects, and custom codes போன்ற அம்சங்களை இந்த அப்டேட் கொண்டுவருகிறது. அவை always-on lock screen-ல் வைக்கப்படலாம். lock screen-க்கு ஒரு அறிவிப்பு ஒளி போன்ற அனுபவமும் உள்ளது. கூடுதலாக, பயனர்கள் personalised lock screen-ஐ வைத்திருக்க Wallpaper Carousel-ஐ இந்த அப்டேட் கொண்டு வருகிறது.

குறிப்பிட்டுள்ளபடி, Redmi K20 அதன் MIUI 11 அப்டேட்டை கடந்த வாரம் பெறத் தொடங்கியது. முதல் தொகுதி சாதனக்களாக Poco F1, Redmi K20, Redmi Y3, Redmi 7, Redmi Note 7, Redmi Note 7S மற்றும் Redmi Note 7 Pro ஆகியவற்றில் அக்டோபர் 22 முதல் அக்டோபர் 31 வரை கிடைக்கும். முதல் தொகுப்பில் மேலும் சில கைபேசிகள் அவற்றின் புதுப்பிப்புகளை விரைவில் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Note 7 Pro, Redmi Note 7 Pro Update, MIUI 11, Xiaomi
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »