கேமரா, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த அப்டேட் பெறும் ‘ரெட்மி நோட் 7 ப்ரோ’!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 17 ஏப்ரல் 2019 16:00 IST
ஹைலைட்ஸ்
  • கேமரா ஷார்ப்னஸ் இந்த அப்டேட் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது
  • பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன
  • இந்த அப்டேட்டைப் பெற சியோமி மேனுவல் ரிலீஸ் செய்துள்ளது

இந்த போனின் 6ஜிபி ரேம்+128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.16,999க்கு விற்கப்படுகிறது

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட் போன் தற்போது எம்ஐயுஐ க்ளோபல் ஸ்டேபிள் ROM V10.2.8.0.PFHINXM அப்டேட் பெற உள்ளது. இந்த அப்டேட் மூலம் போனின் கேமரா மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த அப்டேட்டை உடனடியாக பெற விரும்பும் ரெட்மி நோட் 7 ப்ரோ பயனர்களுக்காக பிரத்யேக லிங்குகளை சியோமி உருவாக்கியுள்ளது. கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது ரெட்மி நோட் 7 ப்ரோ. அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து, சீனாவில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. 

மேனுவலாக இந்த அப்டேட் பெற ரெட்மி அளித்துள்ள ரெக்கவரி ரோம் மற்றும் ஃபாஸ்ட்பூட் ரோம் லிங்குகளை பயன்படுத்த வேண்டும். மேனுவலாக அப்டேட்டை தரவிறக்கம் செய்வோர், போனில் இருக்கும் தகவல்களை சேமித்து வைத்துவிட்டு தொடருவது நல்லது. 

இந்த புதிய அப்டேட் மூலம் சியோமி நிறுவனம், ரெட்மி நோட் 7 ப்ரோ-வின் 48 மற்றும் 12 மெகா பிக்சல் கேமராக்களில் ஷார்ப்னஸ்-ஐ அதிகப்படுத்தியுள்ளது. ஆட்டோ வொய்ட் பேலன்ஸ் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் படம் எடுத்தலிலும் பல மேம்படுத்தல்களை இந்த அப்டேட் மூலம் சியோமி செய்துள்ளதாக தெரிகிறது. 

இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம்+64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் 6ஜிபி ரேம்+128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.16,999க்கு விற்கப்படுகிறது. நேப்டியுன் ப்ளூ, நேபுலா ரெட் மற்றும் ஸ்பேஸ் ப்ளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 7 ப்ரோ அமைப்புகள்:

ரெட்மி நோட் 7 ப்ரோவுடன் வெளியான ரெட்மி நோட் 7 போனில் இடம் பெற்றிருந்த 'ஆஃரா டிசைனை' பெற்றுள்ளது. 6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி வசதிகளையும் இந்த போனும் பெற்றுள்ளது.

மேலும் 11nm ஆக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரால் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ பவரூட்டப்பட்டுள்ளது. இதர வசதிகளாக (4ஜிபி/ 6ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 6ஜிபி / 128ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் முதற்நிலை சென்சாரும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரும் உள்ளன.

செயற்கை நுண்ணறிவு இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி வசதிக்காக முன்புறத்தில் 13  மெகா பிக்சல் ஃபிரன்ட் ஷூட்டரும், 4கே சப்போர்ட் உடைய வீடியோ பதிவு செய்யும் கேமராவும் உள்ளன. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஆண்ட்ராய்டு பைய் போன்ற எம்ஐயூஐ 10 மென்பொருளில் இயங்குவதால் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அத்துடன் 4,000mAh பேட்டரி பவர், குயிக் சார்ஜ் சப்போர்ட், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற பல அப்டேட்களை இந்த போன் பெற்றுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. உங்க ஐபோன் ஸ்லோவா இருக்கா? இதோ வந்துருச்சு iOS 26.3! புது அம்சங்கள் முதல் பேட்டரி தீர்வு வரை.. முழு விவரம் உள்ளே
  2. சாம்சங் வெறியர்களே ரெடியா? S26 Ultra-வோட 360 டிகிரி லுக் வெளியாகிடுச்சு! அந்த கேமரா ஐலேண்ட் வேற லெவல்.. முழு விவரம் உள்ளே
  3. Pixel 9a விலையில 11,000 ரூபாய் அதிரடி குறைப்பு! கூகுள் கேமரா வேணுமா? அப்போ உடனே இதை பாருங்க
  4. வெயிட்டிங் லிஸ்ட் ஓபன்! Samsung Galaxy S26 சீரிஸ் இப்போவே ப்ரீ-ரிசர்வ் பண்ணலாம்! அமேசான், பிளிப்கார்ட்ல அதிரடி விற்பனை
  5. பட்ஜெட் பத்தி கவலையே இல்ல! Samsung Galaxy S24 Ultra விலையில ₹25,000 தள்ளுபடி! அமேசான்ல ஆஃபர் மழை.. சீக்கிரம் பாருங்க
  6. சார்ஜ் போட மறந்தாலும் கவலை இல்ல! Oppo K14x 5G-ல அசுரத்தனமான 6500mAh பேட்டரி! விலை என்ன தெரியுமா?
  7. ஒன்பிளஸ் வெறியர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 13 விலையில 12,000 ரூபாய் அதிரடி குறைப்பு! இந்த சான்ஸ விட்றாதீங்க மக்களே
  8. iPhone-க்கு டஃப் கொடுக்க Samsung S26 ரெடி! எப்போ லான்ச்? என்னென்ன ஸ்பெஷல்? முழு விவரம் உள்ளே
  9. OnePlus-ல இவ்வளவு கம்மி விலையா? Pad 3 முதல் Buds Pro 3 வரை வாரி வழங்கும் சலுகைகள்
  10. பட்ஜெட் விலையில ஒரு தரமான 5G போன்! Lava Bold N2 இந்தியாவிற்கு வராரு.. மத்த பிராண்ட்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.