ரெட்மி நோட் 7, நோட் 7 ப்ரோ இன்று அதிரடி விற்பனை!

ரெட்மி நோட் 7, நோட் 7 ப்ரோ இன்று அதிரடி விற்பனை!

இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம்+64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • இன்று 12 மணிக்கு இந்த விற்பனை ஆரம்பித்தது
  • இரண்டு போன்களும் ஒரே நேரத்தில் விற்பனையை ஆரம்பிக்கும்
  • ரெட்மி நோட் 7 போனின் விலை 9,999 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது
விளம்பரம்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமடைந்துள்ள ரெட்மி நிறுவனத்தின் நோட் 7 ப்ரோ மற்றும் நோட் 7 போன்கள் இன்று மீண்டும் விற்பனை செய்யப்பட உள்ளன. ஃப்ளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் இந்த விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்கும். 

பொதுவாக இந்த இரண்டு போன்களும் வாரந்தோறும் புதன் கிழமை, ஃப்ளாஷ் சேல் மூலம் விற்பனை செய்யப்பட்டாலும், கடந்த வியாழக் கிழமையிலிருந்து ‘எம்ஐ ஃபேன் ஃபெஸ்டிவல் 2019' சேல் நடந்து வருகிறது. இதனால், கடந்த இரண்டு நாட்களிலும் நோட் 7 ப்ரோ மற்றும் நோட் 7 போன்கள் விற்பனையில்தான் உள்ளன. ஏப்ரல் 6 ஆம் தேதி வரை இந்த ஃபேன் சேல் தொடரும். 

ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சலுகைகள்:

இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம்+64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் 6ஜிபி ரேம்+128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.16,999க்கு விற்கப்படுகிறது. நேப்டியுன் ப்ளூ, நேபுலா ரெட் மற்றும் ஸ்பேஸ் ப்ளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 7 தயாரிப்பின் 3ஜிபி ரேம்+32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.9,999க்கு துவங்குகிறது. அடுத்தபடியாக இருக்கும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மாடல் ஸ்மார்ட்போன் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. சியோமியின் இந்த தயாரிப்புகள் ஓன்க்ஸ் ப்ளாக், ரூபி ரெட் மற்றும் சபையர் ப்ளூ நிறங்களில் வருகின்றன.

ஆன்லைன் தளம் மட்டுமின்றி இந்த எம்ஐ தயாரிப்புகள் ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

ரெட்மி நோட் 7 அமைப்புகள்:

6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி அமைப்புகளையும் ரெட்மி நோட் 7 பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டா-கோர் பிராசஸர் கொண்டுள்ளது.

இதர வசதிகளாக (3ஜிபி/ 4ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 32ஜிபி / 64ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. இந்த போனில் இரண்டு பின்புற கேமரா சென்சார்களை இருக்கும் நிலையில், அதில் ஓன்று 12 மெகா பிக்சலை கொண்ட முதற்நிலை சென்சாரையும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரையும் பெற்றுள்ளன.

கூடுதலாக 4,000mAh பேட்டரி, பின்புற ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டைப் சி போர்ட் மற்றும் குயிக் சார்ஜ் சப்போர்ட் போன்றவற்றை இந்த போன் பெற்றுள்ளது. இந்த போனின் மென்பொருளைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 9 பைய் மற்றும் எம்ஐயுஐ 10-ல் இயங்குகிறது. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஓன்க்ஸ் பிளாக், ரூபி ரெட் மற்றும் சபையர் புளூ நிறங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

ரெட்மி நோட் 7 ப்ரோ அமைப்புகள்:

ரெட்மி நோட் 7 ப்ரோவுடன் வெளியான ரெட்மி நோட் 7 போனில் இடம் பெற்றிருந்த 'ஆஃரா டிசைனை' பெற்றுள்ளது. 6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி வசதிகளையும் இந்த போனும் பெற்றுள்ளது.

மேலும் 11nm ஆக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரால் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ பவரூட்டப்பட்டுள்ளது. இதர வசதிகளாக (4ஜிபி/ 6ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 6ஜிபி / 128ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் முதற்நிலை சென்சாரும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரும் உள்ளன.
செயற்கை நுண்ணறிவு இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி வசதிக்காக முன்புறத்தில் 13  மெகா பிக்சல் ஃபிரன்ட் ஷூட்டரும், 4கே சப்போர்ட் உடைய வீடியோ பதிவு செய்யும் கேமராவும் உள்ளன. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஆண்ட்ராய்டு பைய் போன்ற எம்ஐயூஐ 10 மென்பொருளில் இயங்குவதால் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் 4,000mAh பேட்டரி பவர், குயிக் சார்ஜ் சப்போர்ட், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற பல அப்டேட்களை இந்த போன் பெற்றுள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Smooth app and UI performance
  • Good battery life
  • Bright and sharp display
  • Shoots decent images in good light
  • Bad
  • Hybrid dual-SIM slot
  • Fast charger not bundled
  • Preinstalled bloatware
  • Average low-light camera quality
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »