இந்தியாவில் ரெட்மி நோட் 7 வெளியாகும் தேதி அறிவிப்பு!

இந்தியாவில் ரெட்மி நோட் 7 வெளியாகும் தேதி அறிவிப்பு!

இரண்டு பின்புற கேமரா மற்றும் 48 மெகா பிக்சல் கேமராவுடன் ரெட்மி நோட் 7 அறிமுகம்!

ஹைலைட்ஸ்
  • குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 மூலம் இயங்குகிறது.
  • இரவு புகைப்படங்கள் எடுப்பதற்கு வசதியாக புதிய அமைப்பு அறிமுகம்
  • ரெட்மி நோட் 7 வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகமாக வாய்பு!
விளம்பரம்

சீன நிறுவனமான சியோமியின் மிகவும் முக்கிய தயாரிப்புக்களில் ஒன்றான ரெட்மி நோட் 7 இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 28ஆம் தேதி இந்திய சந்தைகளில் ரெட்மி நோட் 7 அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே இந்த போன் குறித்து தொடர்ந்து வதந்திகள் மற்றும் தகவல்கள் வந்த நிலையில், இந்த போன் கடந்த ஜனவரி மாதம் சீனாவில் அறிமுகமாகி சுமார் 1 மில்லியன் ரெட்மி போன்களை விற்று சாதனை படைத்தது. 

மேலும், சீனாவில் வெளியாகிய பிறகு இந்தியாவில் தான் இந்த போன் முதலில் வெளியாகுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த போன் இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் வரவேற்பை முழுவதுமாக மாற்றி ஒரு தனி இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3ஜிபி ரேம்/32 ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ள மாடல் ரூபாய் 10,300க்கும், ரூபாய் 12,400க்கும் 4ஜிபி ரேம்/64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடலும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறிது. 

அதுபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ள மாடல் ரூபாய் 14,500 விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

6.3 இஞ்ச் திரை, ஸ்னாப்டிராகன் 660 ஆக்டா கோர் பிராஸ்சர் மற்றும் 48 மெகா பிக்சல் கேமரா போன்ற பல முக்கிய வசதிகளுடன் இந்த ரெட்மி நோட் 7 வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது. 

டுவைலைய்ட் கோல்டு, பேன்டசி புளூ மற்றும் பிரைய்ட் பிளாக் போன்ற நிறங்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Redmi Note 7, Redmi Note 7 India Launch
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. ரூபாய் 1 லட்சத்துக்கு கீழ் பட்ஜெட்டில் தரமான லேப்டாப் வேண்டுமா
  2. பட்ஜெட் விலையில் கிடைக்கும் Air Conditioners இப்போ விட்டா அவ்வளோ தான்
  3. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு Amazon Great Republic Day Sale 2025 ஆபர்
  4. Amazon Great Republic Day Sale 2025: ஸ்மார்ட் டிவிகளில் அதிரடி விலைகுறைப்பு
  5. Amazon Great Republic Day Sale 2025 விற்பனையில் அடித்து தூக்கும் டேப்லெட்கள்
  6. Amazon Great Republic Day Sale 2025 விற்பனையில் அடித்து தூக்கும் டேப்லெட்கள்
  7. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  8. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  9. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  10. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »