கடந்த ஆறு மாதங்களாக வாராந்திர ஃப்ளாஷ் சேல்களில் மட்டுமே வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு வாங்கிக்கொண்டிருந்த ரெட்மி நோட் 5 ப்ரோ திறன்பேசியை இனி எல்லா நாளும் சாதாரணமாக ஆர்டர் செய்து வாங்கலாம்.
4ஜிபி ரேம், 6ஜிபி ரேம் என இருமாதிரிகளில் கிடைக்கும் இப்போன் ஃப்ளிப்கார்ட் தளத்திலும், MI.com தளத்திலும் கிடைக்கும். கருப்பு, நீலம், தங்கம், ரோஸ் கோல்ட் என நான்கு வண்ணங்களில் இப்போன் கிடைக்கும். ஃப்ளிப்கார்ட்டில் 4ஜிபி மாடலில் இந்நான்கு வண்ணங்களும் கிடைக்கும் எனினும் 6ஜிபி மாடலில் தற்போதைக்கு நீல நிறம் மட்டுமே இருப்பு உள்ளது.
Redmi Note 5 Pro – விலை, சலுகைகள், திறன்குறிப்பீட்டு விவரங்கள்:
இந்தியாவில் 4ஜிபி ரேம் மாடலின் விலை 14,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி மாடலின் விலை 16,999 ரூபாய் ஆகும். 4ஜிபி மாடலின் விலை முன்பு 13,999 ஆக இருந்தது. 2018 நிதிநிலை அறிக்கையின் பின்னர் இதில் ஆயிரம் ரூபாய் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2200 ரூபாய் கேஷ்பேக், ஜியோ நெட்வர்க்கில் 4.5 டிபி கூடுதல் டேட்டா, ஹங்காமா மியூசிக்கில் மூன்று மாத இலவச சந்தா என ஏராளமான அறிமுகச்சலுகைகள் இதனுடன் கிடைக்கின்றன. ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 5% கழிவும் உள்ளது.
டூயல் சிம், நூகட் MIUI 9, 5.99” முழு எச்டி டிஸ்பிளே (1080*2160), 18:9 உயர அகலத் தகவு, 450-nit ப்ரைட்னஸ், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636SoC ஆகிய அம்சங்களை இப்போன் கொண்டுள்ளது. இரட்டை பின்புற கேமரா (12 mp, f/2.2 & 5mp, f/2.0). முன்புறம் 20mp கேமராவையும் எல்இடி ஃப்ளாஷையும் கொண்டுள்ளது.
மெமரியைப் பொருத்தவரை 64 ஜிபி வரை கிடைக்கிறது. தேவைப்பட்டால் மெமரி கார்டு மூலம் 128 ஜிபி வரை இதனை நீட்டித்துக்கொள்ள முடியும். 4ஜி VoLTE, வைபை 802.11 b/g/n, ப்ளூடூத், 3.55மிமீ இயர்போன், மைக்ரோ யூஎஸ்பி ஆகிய கனெக்விட்டி வசதிகள் உள்ளன. அனைத்துக்கும் மேல் 5V/2A ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4000mAh பேட்டரியினை ரெட்மி நோட் 5 ப்ரோ கொண்டுள்ளது. இதன் அளவுக்குறிப்பு: 158*75.4*8.05மிமீ ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்