இப்போது MIUI 11 இந்தியாவில் முழு வீச்சில் பரப்பப்பட்டுள்ளது. Redmi 7, Redmi Y3 மற்றும் Redmi Note 7 போன்ற முதல் தொகுதி தொலைபேசிகளுக்கான நிலையான MIUI 11 அப்டேட்டை வெளியிட்ட பிறகு, நிறுவனம் இப்போது பழைய தொலைபேசிகளிலும் தனது கவனத்தை திருப்பியுள்ளது. இந்தியாவில் Redmi Note 5 Pro-வுக்கான MIUI 11 அப்டேட்டை ஜியோமி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. Redmi Note 5 Pro-வுக்கான நிலையான MIUI 11 அப்டேட் அக்டோபர் பாதுகாப்பு இணைப்பு (October security patch), பிழை திருத்தங்கள் மற்றும் அமைப்பு மாற்றங்களை வழங்குகிறது.
Mi community forum-ல் Redmi Note 5 Pro பயனர்களின் பல அறிக்கைகளை, இந்தியாவில் MIUI 11 அப்டேட்டைப் பெறுவது பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருக்கிறோம். புதுப்பிப்பு, MIUI v11.02.0 PEIMIXM என்ற பில்ட் எண்ணைக் கொண்டுள்ளது. இது 622MB அளவு மற்றும் அக்டோபர் பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது. வைஃபை பக்கத்தை சரியாகக் காண்பிப்பதைத் தடுக்கும் சிக்கலுக்கான தீர்வையும், சில பேட்டரி சேவர் விருப்பங்களை மறைத்த மற்றொரு சிக்கலையும் சரிசெய்ய கொண்டு வருகிறது. பயனர்கள் பகிர்ந்த சேஞ்ச்லாக் Android 9 Pie-ஐ அடிப்படையாகக் கொண்டது என்பதைக் காட்டுகிறது.
புதிய அம்சங்களைப் பற்றி பேசுகையில், Redmi Note 5 Pro-வுக்கான MIUI 11 v11.02.0 PEIMIXM அப்டேட் கேம் டர்போவில் கூடுதல் மெனுவைத் திறப்பதற்கான தொடர்ச்சியான ஸ்வைப் மற்றும் கேம் டர்போவிற்கு முகப்புத் திரை குறுக்குவழியை (home screen short cut) உருவாக்கும் திறன் போன்ற ஒரு டன் புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. மேலும், ஆட்டோபிளே மற்றும் இரண்டு சிம்களால் வழங்கப்பட்ட இணைய இணைப்புக்கு இடையில் மாறுவதற்கான திறனும் கேம் டர்போவில் வந்துள்ளன. கடைசியாக, auto-brightness, reading mode, and screenshot gestures தானாக அணைக்கக்கூடிய திறனும் Redmi Note 5 Pro-வுக்கு வழிவகுத்துள்ளது.
MIUI 11 அறிமுகப்படுத்திய முக்கிய மாற்றங்களைப் பற்றி இங்கே படிக்கலாம். உங்களிடம் Redmi Note 5 Pro இருந்தால், இந்த பாதையைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தொலைபேசியில் MIUI 11 அப்டேட்டை நீங்கள் சரிபார்க்கலாம்: Settings > About phone > System update. சுவாரஸ்யமாக, நவம்பர் 4 ஆம் தேதி துவங்கவிருக்கும் MIUI 11 ரோல்அவுட்டின் இரண்டாம் கட்டத்தில் அப்டேட்டைப் பெற வேண்டிய தொலைபேசிகளில் Redmi Note 5 Pro உள்ளது. ஆனால் ஜியோமி ஒரு லிமிடேட் வெளியீட்டை சோதனையுடன் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது .
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்