சியோமி நிறுவனத்தின் Y3 போன் குறித்து தொடர்ந்து தகவல்கள் கசிந்து வந்த நிலையில், அந்த போன் விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது என்று கூறப்படுகிறது. இதுவரை Y3 போன், அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும், அது குறித்து பரபரப்புக்குப் பஞ்சம் இல்லை. சீனாவிலும் இந்த போன் குறித்து தொடர்ந்து சலசலக்கப்பட்டு வருகிறது. சீனாவிலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் Y3 ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. போன் குறித்து வெளியிடப்பட்ட டீசரில், 32 மெகா பிக்சல் கேமரா இருப்பது தெரிகிறது. சியோமி நிறுவனம் சமீபத்தில், ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ போன்களை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
This is what happened when @manukumarjain got his hands on the upcoming #Redmi phone.
— Redmi India (@RedmiIndia) April 10, 2019
Why is Manu on selfie spree? #YYY? ????
1, 2, 3...damn, we can't keep count of people who feature in Manu's selfies. Can you, Mi fans? pic.twitter.com/Z46ukZj19M
சமீபத்தில் Y3 குறித்து, ரெட்மி இந்தியா, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட டீசரில், நிறுவனத்தின் இந்திய தலைவர் மனு குமார் இருந்தார். அவர் வீடியோவில் தனது சகாக்களுடன் 32 செல்ஃபிக்கள் எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார். இது செல்ஃபி கேமரா 32 மெகா பிக்சல் திறன் கொண்டது என்பதற்கான குறியீடாக பார்க்கப்படுகிறது. மேலும் அந்த ட்வீட்டுடன், #YYY என்ற ஹாஷ்டேக் பதியப்பட்டிருந்தது. இது இந்த புதிய போன், Y வரிசையில் இருக்கும் என்பதை சூசகமாக உணர்த்தியது.
ரெட்மி Y3, சாம்சங் 32 மெகா பிக்சல் ISOCELL ப்ரைட் GD1 இமேஜ் சென்சாரை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ரெட்மி Y3 போனை அடுத்து, ரெட்மி 7 மற்றும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட் போன்களும் வெளியிடப்படும் என்று பிரபல போன் வல்லுநர் இஷான் அகர்வால் கூறுகிறார். ஆனால், இந்த போன்கள் எப்போது இந்திய சந்தைக்கு வரும் என்பதை இப்போதைக்கு யாராலும் உறுதிபட கூற முடியவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்