சியோமியின் துணை பிராண்டான ரெட்மீ சமீபத்தில் அறிமுகப்படுத்திய ‘ரெட்மீ கோ' ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் மார்கெட்டுகளில் தற்போது காணப்பட்டுள்ளது. அங்கு முன் பதிவுக்கு வெளியாகியுள்ள நிலையில், ஷிப்பிங்கை வரும் பிப்ரவரி 5 முதல் தொடங்கவுள்ளது.
மேலும் முன்பதிவு செய்யும்போது வரும் தகவல் படி 5 இஞ்ச் டிஸ்பிளே, 8 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் 3,000mAh பேட்டரி பவர் என பல அப்டேட்களுடன் இந்த ‘ரெட்மீ கோ' வெளியாகவுள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியுள்ள ரெட்மீ நோட் 7 போனுக்கு பின்னர், ரெட்மீ - சியோமி இணைந்த பிறகு வெளியாகும் இரண்டாவது ஸ்மார்ட்போன் இதுவே.
ரூபாய் 5,433-க்கு பிலிப்பைன்ஸில் முன்பதிவுக்கு வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல நிற வண்ணங்களில் வெளியாகவுள்ளது. இலவச டெலிவரி மற்றும் 1 வருட இலவச வாரண்டி போன்ற சலுகைகளுடன் முன்பதிவை தொடங்கியுள்ள நிலையில், ஜரோப்பிய நாடுகளில், 80 யூரோக்கள் மதிப்புடைய ரெட்மீ கோ வரும் பிப்ரவரி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
டிசையின் பொருத்தவரை மேல் பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் சீன் டிஸ்பிளே வடிவத்தை கொண்டுள்ள இந்த ரெட்மீ கோ ஸ்மார்ட்போனில் வால்யூம் மற்றும் பவர் பட்டன் வலது புறத்தில் உள்ள நிலையில், கைவிரல் ரேகை பதிவிற்கான இடம் ஏதும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட் மீ கோ-வின் சிறப்பு அம்சங்கள்:
அண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 5 இஞ்ச் ஹெச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்-கோர் பிராஸசரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளது.
கேமரா வசதிகள் பொருத்தவரை 8 மெகா பிக்சல் பின்புர கேமரா மற்றும் 5 மெகா பிக்சல் சென்சரை கொண்டுள்ளது. மேலும் 3,000mAh பேட்டரி வசதியுடன் ரெட்மீ கோ பிலிப்பைன்ஸில் வெளியாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்