இன்று மீண்டும் விற்பனைக்கு வெளியாகியுள்ள ரெட்மி கோ ஸ்மார்ட்போன்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 25 மார்ச் 2019 16:52 IST
ஹைலைட்ஸ்
  • எம்ஐ.காம் மற்றும் ஃபிளிப்கார்டில் வெளியாகும் ரெட்மி கோ ஸ்மார்ட்போன்!
  • 1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்பு வசதியை இந்த போன் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் ரூ.4,499க்கு விற்பனை செய்யப்படும்

5 இஞ்ச் ஹெச்டி திரை மற்றும் 1ஜிபி ரேமை இந்த போன் இன்று மீண்டும் விற்பனைக்கு வெளியாகுகிறது.

சியோமி நிறுவனத்தின் சார்பில் 'ரெட்மி கோ' ஸ்மார்ட்போன் இன்று மீண்டும் ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் விற்பனைக்கு வெளியானது. இன்று மதியம் 2 மணி முதல் இந்த சேல் நடைபெற்று வருகிறது.

ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் இந்த இரண்டாவது சேல் போன் ஸ்டாக்கில் இருக்கும் வரை தொடரும். 3,000mAh பேட்டரி, ஹெச்டி திரை மற்றும் 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி போன்ற பல சிறப்பு அம்சங்களை இந்த ரெட்மி கோ போன் பெற்றுள்ளது.

மேலும் அறிமுக சலுகைகளாக ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.2,200 மதிப்புள்ள கேஷ்பேக் மற்றும் 100ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி வட்டியில்லா தவணைத்திட்ட வசதி மற்றும் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு பயனாளிகளுக்கு 5% தள்ளுபடியும் வழங்கப்படவுள்ளது.

ரெட்மி கோ இந்திய விலை மற்றும் அறிமுக சலுகைகள்:

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.4,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனின் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பு வசதியை கொண்ட மாடல் இந்தியாவில் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் நீல நிறங்களில் விற்பனைக்கு வெளியாகிறது.

அறிமுக விற்பனையைத் தொடர்ந்து ரூ.2,200 மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் 100ஜிபி இலவச டேட்டாவை ஜியோ நிறுவனம் இந்த போனுக்குத் தருகிறது. மேலும் ஃபிளிப்கார்ட் சார்பில் இந்த போனுக்கு கட்டணமில்லா தவணைத் திட்ட வசதி, ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர்க்கு கூடுதலாக 5 சதவிகித தள்ளுபடி போன்ற வசதிகள் கிடைக்கின்றன.
 

ரெட்மி கோ அமைப்புகள்:

Advertisement

இரண்டு சிம்-கார்டு வசதிகள் கொண்டுள்ள இந்த ரெட்மி கோ ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) கொண்டு இயங்குகிறது. மேலும் 5 இஞ்ச் ஹெச்டி திரை, குவாட்-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 425 SoC மற்றும் 1ஜிபி ரேமை இந்த போன் கொண்டுள்ளது.

பின்புறத்தில் 8 மெகா பிக்சல் சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் மாட்யூலை கொண்டுள்ளது. ஹெடிஆர் அமைப்புகள், ஹெச்டி வீடியோ ரெக்கார்டிங் போன்ற பல ஸ்மார்ட் அமைப்புகளை இந்த போன் கொண்டுள்ளது.

இந்த போனில் 8ஜிபி சேமிப்பு வசதி மட்டுமே உள்ள நிலையில் சியோமி நிறுவனம் சார்பில் 128 ஜிபி வரையுள்ள எஸ்டி கார்டு பொருத்தும் வசதி இடம் பெற்றுள்ளது. 137 கிராம் மற்றும் 3,000mAh பேட்டரி வசதியை இந்த போன் கொண்டுள்ளது.

Advertisement

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு மைக்ரோபோன்கள் போனில் இருக்கும் வீண் சத்தங்களை குறைக்கும் என சியோமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Extremely affordable
  • Well built and good-looking
  • Good battery life
  • Bad
  • Sub-par cameras
  • Limited RAM and storage
 
KEY SPECS
Display 5.00-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 8GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo (Go edition)
Resolution 720x1280 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Go, Redmi Go price in India, Redmi Go specifications, Redmi Go sale

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சோனி WH-1000XM6 இப்போது இந்தியாவில் ஆலிவ் கிரே வண்ணத்தில் கிடைக்கிறது: விலை, கிடைக்கும் இடம், அம்சங்கள்
  2. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்பிளஸ் 15 சலுகை இது
  3. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026: ரூ. 20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்!
  4. ரியல்மி 16x 5G பற்றிய தொகுப்பு: வெளியீட்டுத் தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. Poco M8 Power vs OnePlus Nord CE 6 Lite vs Moto G77 Power: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு!
  6. ஓட்டுநர் வேலைகள் ஆபத்தில் இருக்குமா? 120,000 ஓட்டுநர் இல்லாத ரோபோடாக்சிகளை இயக்க ஊபர் திட்டம்
  7. itel Ace 3 Heera இந்தியாவில் ₹1,000-க்குள் அறிமுகம்: புளூடூத், கால் ரெகார்டிங், வயர்லெஸ் FM ரேடியோ வசதி!
  8. வோடஃபோன் ஐடியா (Vi) ரூ. 230 முதல் புதிய ப்ரீபெய்ட் பிளான்களுடன் ஸ்பாட்டிஃபை ப்ரீமியத்தை வழங்குகிறது
  9. இன்டெல் N50, கூகுள் AI அம்சங்களுடன் அசுஸ் குரோம்புக் CX15 இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  10. iQOO Z11 இந்தியாவில் ஆகஸ்ட் 20 அன்று அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள், அம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.