இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடவுள்ள ரெட்மீ நிறுவனம்: தகவல்கள் உள்ளே!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 11 மே 2019 15:25 IST
ஹைலைட்ஸ்
  • இரண்டு புதிய மாடல் ரெட்மீ ஸ்மார்ட்போன்களை வெளியிடவுள்ளது ரெட்மீ.
  • ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர், 48 மேகாபிக்சலுடன் மூன்று பின்புற கேமராக்கள்.
  • ஒரு ஸ்மார்ட்போன் போகோ F2 ஆக இருக்கலாம்.

ரெட்மீ நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன்கள்

ரெட்மீ என்ற பெயரில் தற்போது தன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுக்கொண்டிருக்கும் சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள அடுத்த போன் குறித்து நாளுக்கு நாள் ஏதோ ஒரு தகவல் வெளியாகிய வண்ணமே உள்ளது. முன்னதாக சியோமி நிறுவனம், தன் அடுத்த ஸ்மார்ட்போனை, ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர் கொண்டு வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு டீசரின் வாயிலாக இந்த போன் மூன்று கேமராக்களை வைத்து வெளியாகப்போகிறது, எனப் பரவலாக பேசப்பட்டது. அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, சியோமி நிறுவனம், அடுத்து ஒரு போனை அல்ல, இரண்டு போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை நான்கு வகையிலான சேமிப்பு அளவு கொண்டு வெளியாக உள்ளதாம். அதுமட்டுமின்றி சீனாவில் முதலில் வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள், மூன்று வண்ணங்களில் வெளியாக இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஷான் அகர்வால் என்ற இந்த துறையின் வல்லுனரின் ட்விட்டர் பதிவின்படி, சியோமி நிறுவனம், சீனாவில், தனது அடுத்த ஸ்மார்ட்போன்களாக இரண்டு புதிய மாடல் ரெட்மீ போன்களை வெளியிடவுள்ளது. மேலும் அந்த ஸ்மார்ட்போன்கள் மூன்று வண்ணங்களில் சீன சந்தையில் கிடைக்கும்-சிவப்பு, நீலம் மற்றும் கார்பன். மேலும் அதன் சேமிப்பு அளவுகளையும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அகர்வால், மொத்தம் நான்கு வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது -  6GB RAM + 64GB சேமிப்பு, 6GB RAM + 128GB சேமிப்பு, 8GB RAM + 128GB சேமிப்பு, மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு.

மேலும் அந்த ட்விட்டர் பதிவில் இஷான் அகர்வால் கூறியதன்படி, இந்த ஸ்மார்ட்போன்கள் சீனாவில் மட்டுமே வெளியாக இருக்கிறது என்றும், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகவுள்ளது என்பது தெரியவில்லை என்றும் பதிவிட்டிருந்தார். இந்த மொபைல்போன் எப்போது சீனாவில் வெளியாகும் என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை என்றாலும், "மை ஸ்மார்ட் ப்ரைஸ்"-ன் தகவல்படி, இந்த ஸ்மார்ட்போன் மே மாத இறுதிக்குள் சியோமி - ரெட்மீ ஆகிய நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இவர் தனது ட்விட்டர் பதிவில், இந்த இரண்டு மொபைல் போன்களுக்கான இரண்டு மாடல் நம்பர்கள் M1903F10 மற்றும் M1903F11, என இரண்டு நம்பர்களை வெளியிட்டிருந்தார். இந்த நம்பர்களை ஆராய்ந்து பார்க்கையில், முன்னதாக இந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்ட போகோ F1-ன் மாடல் நம்பர் E10 என்ற இலக்கு கொண்டு முடியும். அதை வைத்து பார்க்கையில் புதிதாக வெளிவரும் போன்களில் ஒரு ஸ்மார்ட்போன் போகோ F2 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாகவே, இந்த நிறுவனத்தின் பொது மேலாளர் லூ வெய்பிங் வெளியிட்டிருந்த ஒரு டீசரில், இந்த போன் திரையிலேயே ஃப்ங்கர்பிரிண்ட் மற்றும் 2 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி என்ற தகவல்களை வெளியிட்டிருந்தார். மேலும், முன்னதாக வெளியான தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் 6.39-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை கொண்டு வெளியாகும். மொத்தமாக மூன்று பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மேகாபிக்சல் கேமராவும், 8 மேகாபிக்சல் மற்றும் 13 மேகாபிக்சல் கேமரா என இரண்டு கேமராக்கள் இருக்கும். மேலும் முன்புறத்தில் 30 மேகாபிக்சல் அளவு கொண்ட செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி,ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர் கொண்டு வெளியாக உள்ள இந்த ஸ்மார்போன், இந்தியாவில் வெளியாகுமா, எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.  

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi, Redmi Flagship, Xiaomi, Snapdragon 855
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.