மீண்டும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் ரெட்மி தயாரிப்புகள்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 27 பிப்ரவரி 2019 14:39 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி நோட் 5 ப்ரோ போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி!
  • ரெட்மி நோட் 6 ப்ரோ போனுக்கும் ரூ.2,000 தள்ளுபடி!
  • இந்த தள்ளுபடி எம்ஐ.காம், பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் பெறலாம்

இந்த சியோமி சேல் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சியோமி நிறுவனம் சார்பாக வெளியான அறிக்கையின்படி வரும் சில நாட்களுக்கு ஒரு தள்ளுபடி சேல் நடத்தப்பட உள்ளது. இந்த சேலின்படி ரெட்மி நோட் 6 ப்ரோ, ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் ரெட்மி Y2 ஆகிய போன்களுக்கு இந்த அதிரடி விலை குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த பிப்வரி மாதம் 26 ஆம் தேதி தொடங்கப்பட்ட போன்களுக்கான இந்த சலுகை விற்பனை, அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் போன்ற தளங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சேல் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடைபெறுகின்ற நிலையில், வங்கிகளின் வட்டியில்லா தவணைத் திட்டம், போன்ற பல சிறப்பு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. 

 

தள்ளுபடி விற்பனையையொட்டி ரெட்மி நோட் 6 ப்ரோ (4ஜிபி) ரூ.13,999-இல் இருந்து ரூ.11,999க்கு குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. 6ஜிபி மாடலை பொறுத்தவரை ரூ15,999யிலிருந்து குறைந்து ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த 2000 ரூபாய் தள்ளுபடி ஃபிளிப்கார்ட் மட்டும் எம்ஐ.காம் ஆகிய தளங்களில் மட்டுமே கிடைக்கிறது.

ரெட்மி நோட் 5 ப்ரோ பொறுத்தவரை 4ஜிபி வகை ஸ்மார்ட்போன் ரூ.10,999 க்கும், 6ஜிபி வகை ரூ.11,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த போன்கள் ரூ.12,999 மற்றும் ரூ.13,999 க்கு விற்கப்பட்டது. 3 தளங்களிலும் இந்த போனை வாங்கலாம்.

இறுதியாக ரெட்மி Y2 தயாரிப்பின் 3ஜிபி மாடல் ரூ.7,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 4 ஜிபி வகையைப் பொறுத்தவரை ரூ.9,999க்கு வாங்க முடியும். இந்த மாடலில் ரூ.1000 வரை விலை குறைந்துள்ள நிலையில் இந்த போனும் மூன்று தளங்களின் மூலமும் வாங்க முடியும்.

இதற்கிடையில் ஃபிளிப்கார்ட் தனியாக மாத இறுதி மொபைல் சேல் ஒன்றை நடத்த இருக்கின்றது. அதில் முக்கிய பிராண்டுகளான ஹானர், சாம்சங் மற்றும் எல்ஜி போன்ற தயாரிப்புகளின் மாடல்கள் தள்ளுபடி விலைக்கு விற்பனைக்குயாகும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  2. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
  3. ஜியோ ஹோம் 2 மாத திட்டத்தில் 1 மாதம் இலவசம்: 100Mbps இன்டர்நெட், 12 OTT ஆப்ஸ்கள் இலவசம்!
  4. அறிமுகத்திற்கு முன் கசிந்தது விவோ S2 விலை, முழு விவரங்கள் மற்றும் வடிவமைப்பு!
  5. கூகிள் இந்தியாவில் 'ஆஸ்க் கூகிள் பே' என்ற ஜெமினி AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
  6. Paytm தனது செயலியில் பகிரப்பட்ட குழுச் செலவுகளுக்காக பில்களைப் பிரிக்கும் வசதியை அறிமுகப்படுத்துகிறது
  7. ஜெமினியால் இப்போது கூகிள் டாக்ஸில் உள்ள கருத்துகளைப் படிக்கவும்,சுருக்கவும்,பதில்களை வரைவு செய்யவும் முடியும்
  8. சாம்சங் கேலக்ஸி S26 FE போனின் சார்ஜிங் வேகத்தில் மாற்றம் இருக்காது என சான்றிதழ் தளம் மூலம் தெரியவந்துள்ளது!
  9. வாட்ஸ்அப் வெப்பில் குரூப் வீடியோ கால் வசதி அறிமுகம்; குவிக்HD, சத்தம் குறைப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன!
  10. விவோ T5x 5G ஃபியூஷன் ரெட் வண்ண மாடல் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.