அக்டோபர் பாதுகாப்பு இணைப்புடன் MIUI 11 அப்டேட் பெறும் Redmi 7!

அக்டோபர் பாதுகாப்பு இணைப்புடன் MIUI 11 அப்டேட் பெறும் Redmi 7!

இந்தியாவில் ஜியோமியின் முதல் தொகுதி MIUI 11 மேம்படுத்தலில் Redmi 7 கடைசி சாதனம் ஆகும்

ஹைலைட்ஸ்
  • Redmi 7-க்கான MIUI 11 அப்டேட், அக்டோபர் பாதுகாப்பு இணைப்பை கொண்டுவருகிறது
  • இந்த அப்டேட், வடிவமைப்பு மற்றும் புதிய ஒலிகளை அறிமுகப்படுத்துகிறது
  • Game Turbo-வை மேம்படுத்துவதோடு, remote print அம்சத்தையும் சேர்க்கிறது
விளம்பரம்

செப்டம்பர் மாதத்தில் MIUI 11-ஐ அறிவித்த பின்னர், இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் பிற ஸ்மார்ட்போன்களில் Redmi Y3, Redmi Note 7, Poco F1 மற்றும் Redmi K20 Pro ஆகியவற்றிற்கான MIUI 11 Global Stable ROM அப்டேட்டை ஜியோமி தொடங்கியது. இவை மேம்படுத்தலின் முதல் தொகுதியாகும். இந்தியாவில் MIUI 11 நிலையான அப்டேட்டை, முதல் தொகுப்பின் கடைசி போனான Redmi 7-ல் ஜியோமி இப்போது தொடங்கியுள்ளது. ஒரு டன் புதிய அம்சங்களை பட்ஜெட் தொலைபேசியில் கொண்டு வருகிறது. Redmi 7-க்கான நிலையான MIUI 11 அப்டேட்டுடனும், அக்டோபர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடனும் (October Android security patch) வருகிறது. ஆனால், இன்னும் Android 10-க்கு பதிலாக Android 9 Pie-ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளது.

Redmi 7 யூனிட்டின் அப்டேட்டை கேஜெட்ஸ் 360-ல் பெற்றுள்ளோம். மேலும், Mi community forum-ல் பல பதிவுகளையும் சந்தித்துள்ளோம். Redmi 7 பயனர்கள் இந்தியாவில் MIUI 11 அப்டேட்டைப் பெறுவது பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். அப்டேட்டைப் பொறுத்தவரை, MIUI v11.0.2.0PFLINXM-ஐ உருவாக்கும் எண்ணைக் கொண்டுள்ளதோடு 1.7GB அளவையும் கொண்டது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த அப்டேட், அண்ட்ராய்டு பை அடிப்படையிலானது. அண்ட்ராய்டு 10 அல்ல. அப்டேட்டின் வெளியீடு இப்போதே தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து Redmi 7 பயனர்களையும் சென்றடையும்.

சேஞ்லாக்கைப் பொறுத்தவரை, நிலையான MIUI v11.0.2.0 அப்டேட், improved touch experience மற்றும் full-screen டிஸ்பிளேவிற்கு better optimisation ஆகியவற்றிற்கான வடிவமைப்பு மாற்றியமைப்பைக் கொண்டுவருகிறது. புதிய ஒலிகள் மற்றும் அனிமேஷன் விளைவுகளுடன் (animation effects) டைனமிக் எழுத்துரு அளவிடுதல் (dynamic font scaling) அம்சமும் உள்ளது. Redmi 7-க்கான MIUI 11 நிலையான அப்டேட் Mi Share file transfer tool, ஆவணங்களைத் திறப்பதற்கு முன் அவற்றை முன்னோட்டமிடும் திறனையும் தருகிறது. அப்டேட்டுடன் புதிய Mi Doc Viewer-ஐ ஜியோமி சேர்த்துள்ளது.

மூன்றாம் தரப்பு செயலியை நிறுவாமல் தொலைபேசியிலிருந்து நேரடியாக புகைப்படங்களை Quick replies, Game Turbo மற்றும் ability மூலம் அச்சிடும் திறனும் வந்துவிட்டன. கூடுதலாக, Redmi 7-க்கான நிலையான MIUI v11.0.2.0 அப்டேட், புதிய screenshot editing tools, lock screen optimisations, notch-ஐ மறைக்க புதிய விருப்பங்கள் மற்றும் Game Turbo enhancements ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது. இங்கே, MIUI 11 பற்றி விரிவாக படிக்கலாம். உங்களிடம் Redmi 7 இருந்தால், இந்த பாதையைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தொலைபேசியில் MIUI 11 அப்டேட்டை நீங்கள் சரிபார்க்கலாம்: Settings > About phone > System update.

MIUI 11 Global Stable ROM அப்டேட்டின் அடுத்த தொகுதி நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 12 வரை நீடிக்கும். இரண்டாவது தொகுப்பில் Redmi 6, Redmi 6 Pro, Redmi 6A, Redmi Note 5, Redmi Note 5 Pro, Redmi 5, Redmi 5A, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi Y2, Redmi 4, Mi Mix 2 மற்றும் Mi Max 2 ஆகிய சாதனங்கள் அடங்கும். Redmi K20 Pro-வும் இரண்டாவது தொகுப்பின் ஒரு பகுதியாகும். ஆனால், கடந்த சில நாட்களாக அதன் அப்டேட்டைப் பெறத் தொடங்கியது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good overall performance
  • Great battery life
  • Very good value for money
  • Bad
  • Disappointing low-light camera performance
  • Lots of ads in MIUI
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1520 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi 7, Redmi 7 Specifications, Xiaomi, Xiaomi India
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »