இன்று மதியம் 12 மணி முதல் ‘ரெட்மி 7' ஸ்மார்ட் போன் இந்தியாவில் முதன்முறையாக விற்பனையைத் தொடங்குகிறது. எம்ஐ.காம் மற்றும் அமேசான்.இன் தளங்கள் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ், எம்ஐ ஸ்டூடியோ அவுட்லெட் கடைகளில் ரெட்மி 7-ஐ வாங்க முடியும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ரெட்மி 6 போனின் அடுத்த வெர்ஷனாகவே தற்போது ரெட்மி 7 வந்துள்ளது. இந்த போனை சியோமி நிறுவனம், ‘அல்டிமேட் ஆல்-ரவுண்டர்' என்று வர்ணித்துள்ளது. டாட் நாட்ச் டிஸ்ப்ளே, ஆரா ஸ்மோக் டிசைன், க்ரேடியன்ட் பின்புற வடிவமைப்பு, குவால்கம் ஸ்னாப்டிராகன் 632 எஸ்.ஓ.சி உள்ளிட்ட வசதிகளை இந்த போன் பெற்றுள்ளது.
ரெட்மி 7 விலை:
ரெட்மி 7-ன் 2ஜிபி + 32ஜிபி காம்போ, 7,999 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. 3ஜிபி + 32ஜிபி காம்போ வெர்ஷன் 8,999 ரூபாய்க்கு விற்கப்படும். எக்ளிப்ஸ் கருப்பு, காமட் நீலம், லூனார் சிவப்பு நிறங்களில் இந்த போன் சந்தையில் கிடைக்கும். முன்னரே சொன்னது போல இன்று மதியம் 12 மணி முதல் ரெட்மி 7, எம்ஐ.காம் மற்றும் அமேசான்.இன் தளங்கள் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ், எம்ஐ ஸ்டூடியோ அவுட்லெட் கடைகளில் கிடைக்கும்.
அறிமுக ஆஃபருக்காக சியோமி நிறுவனம், ஜியோ நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. இதன் மூலம் ரெட்மி 7-ஐ வாங்குபவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு டபுள்-டேக்கா ஆஃபர் கொடுக்கப்பட உள்ளது. 2,400 கேஷ்-பேக் ஆஃபரும் கொடுக்கப்படும்.
ரெட்மி 7 சிறப்பம்சங்கள்:
ரெட்மி 7 போனின் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை சீனாவில் சுமார் 7,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் 8,200 ரூபாய்க்கும், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் 10,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டூயல் நானோ சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9 பைய், 6.26 இன்ச் எச்.டி+ டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு, ஆக்டோ-கோர் குவாலகம் ஸ்னாப்டிராகன் 632 எஸ்.ஓ.சி உள்ளிட்ட வசதிகளை இந்த போன் பெற்றிருக்கும்.
கேமராவைப் பொறுத்தவரை 12 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 2 மெகா பிக்சல் இரண்டாவது கேமராவையும் ரெட்மி 7, பின்புறத்தில் பெற்றிருக்கும்.
4ஜி VoLTE, Bluetooth v4.2, GPS/ A-GPS, USB, Infrared (IR) blaster, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக், 4000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளையும் இந்த போன் பெற்றிருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்