108MP மெகாபிக்சல் கேமராவோடு இறங்கி இருக்கும் Redmi 13 5G

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 6 ஆகஸ்ட் 2024 16:29 IST
ஹைலைட்ஸ்
  • 108MP மெகாபிக்சல் கேமராவோடு வந்துள்ளது
  • 5,030mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது
  • 6.79 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி திரையைக் கொண்டுள்ளது

Photo Credit: Redmi

 இந்தியாவில் Redmi 13 5G செல்போன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Snapdragon 4 Gen 2 AE சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவில் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இது பிராண்டின் பட்ஜெட் 5G போனாக வெளியாகி இருக்கிறது. Redmi 12 5G மொபைலின் வெற்றியைத் தொடர்ந்து இந்த மாடல் வெளியாகி உள்ளது. Redmi 13 5G செல்போன் 108MP கேமரா, 120Hz டிஸ்ப்ளே, 5030mAh பேட்டரியை கொண்டுள்ளது. 

இந்தியாவில் Redmi 13 5G விலை

இந்தியாவில் Redmi 13 5G 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் 13,999 ரூபாய் 
8ஜிபி + 128ஜிபி 15,499 ரூபாய் 

இது இறுதி விலையா என்பது குறித்து நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஹவாய் ப்ளூ, பிளாக் டயமண்ட் மற்றும் ஆர்க்கிட் பிங்க் வண்ணங்களில் கிடைக்கிறது. Amazon, Redmi நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கிறது. 1,000 ரூபாய் வரை வங்கி தள்ளுபடி கிடைக்கும். 

Redmi 13 5G சிறப்பு அம்சங்கள் 

Redmi 13 5G டூயல் சிம் வசதியுடன் ஆண்ட்ராய்டு 14, சியோமியின் ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின் மூலம் இயங்குகிறது. 6.79-இன்ச் முழு-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) IPS LCD டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வந்துள்ளது. குவால்கம் 4nm ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 Gen 2 AE SoC சிப் மூலம் இயக்கப்படுகிறது. 8GB வரை ரேம் வசதி உள்ளது. 

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு Samsung ISOCELL HM6 சென்சார் மற்றும் f/1.75 வசதியுடன் கூடிய 108 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முதன்மை கேமராவில் 3x இன்-சென்சார் ஜூம் இருக்கிறது. வீடியோ காலிங் மற்றும் செல்ஃபிக்களுக்கு முன்பக்கம் 13-மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. 

Redmi 13 5G  செல்போனில் 128GB உள்ளடங்கிய ஸ்டோரேஜ் உள்ளது. SD கார்டு வழியாக இன்டெர்னல் ஸ்டோரேஜ் 1 TB வரை அதிகரிக்கலாம். 5G, 4G LTE, டூயல் பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகிய வசதிகள் உள்ளது. USB Type-C போர்ட் மூலம் 5,030mAh பேட்டரியை 33W திறனில் சார்ஜ் செய்யலாம்.  

Redmi 13 5G அகச்சிவப்பு (IR) கதிர் டிரான்ஸ்மிட்டரையும் கொண்டுள்ளது. இது பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. செல்போன் மொத்தமாக 205g எடையுடையது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi 13 5G, Redmi, Redmi 5G, Snapdragon 4

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியால 10 கோடி பேர் ChatGPT யூஸ் பண்றாங்களா? வாராந்திர பயனர்களில் இந்தியா 2-வது இடம்! மாணவர்கள் தான் டாப்
  2. Vivo X300 FE லான்ச் ரெடி! 90W சார்ஜிங் கூடவே 6500mAh பேட்டரியா? விவோ-வின் இந்த பட்ஜெட் பிளாக்ஷிப் போன் பத்தி தெரிஞ்சிக்கோங்க
  3. சாம்சங் ஃபோல்டபிள் போன்ல இனிமே அந்த பிரச்சனை இருக்காது! புதிய "Wide" டிசைன் ரெடியாகுது! இதோ லீக் ஆன தகவல்கள்
  4. Apple-ல இருந்து மலிவு விலையில ஒரு MacBook-ஆ? அதுவும் செம்ம கலர்ஸ்ல வருதா? ஆப்பிள் பிரியர்களுக்கு இதோ ஒரு செம்ம குட் நியூஸ்
  5. AI உலகமே டெல்லிக்கு வருது! இந்தியாவின் முதல் AI Impact Summit 2026 - எப்படி Register செய்வது? Full Schedule இதோ
  6. பட்ஜெட் விலையில ஒரு தரமான சம்பவம்! Lava Yuva Star 3 லான்ச் ஆகிடுச்சு! 5000mAh பேட்டரியோட ஒரு 'ஸ்டார்' போன்
  7. மியூசிக் லவ்வர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்! Sony WF-1000XM6 லான்ச் ஆகிடுச்சு! நாய்ஸ் கேன்சலேஷன்ல இதுதான் இப்போ ராஜா
  8. சும்மா சில்லுன்னு ஒரு நியூஸ்! Panasonic 2026 AC Range இப்போ இந்தியாவில லான்ச் ஆகிடுச்சு! தூசி படியாது, கரண்ட் மிச்சம்
  9. பட்ஜெட் விலையில ஒரு ஃபிளாக்ஷிப் கில்லர்! Infinix Note 60 Ultra கீக்பெஞ்ச்ல லீக் ஆகிடுச்சு! 200MP கேமரா, சாட்டிலைட் கனெக்டிவிட்டினு மிரட்டுது
  10. இனி பெரிய அடாப்டர் தேவையில்லை! சியோமியோட குட்டி 'மினி GaN' சார்ஜர் லான்ச் ஆகிடுச்சு! கேபிளும் உள்ளயே இருக்கு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.