இந்தியாவில் இன்று வெளியாகிறது Realme X50 Pro 5G!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 24 பிப்ரவரி 2020 10:25 IST
ஹைலைட்ஸ்
  • Realme X50 Pro 5G குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
  • பிரதான ஸ்னாப்பர் 64 மெகாபிக்சல் சென்சார் பயன்படுத்துகிறது
  • Realme X50 Pro 5G, 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது

Realme X50 Pro 5G, Rust Red மற்றும் Moss Green கலர் ஆப்ஷகளில் வருகிறது

இந்தியாவின் முதல் 5G போனாக கூறப்படும் Realme X50 Pro 5G இன்று வெளியாக உள்ளது. இந்த போன் முதலில் MWC 2020-ல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளியீட்டு நிகழ்வு இந்தியாவுக்கு நகர்த்தப்பட்டது. 


Realme X50 Pro 5G வெளியீடு: லைவ் ஸ்ட்ரீமை எப்படிப் பார்ப்பது?

Realme X50 Pro 5G's வெளியீட்டு நிகழ்வு பிப்ரவரி 24-ஆம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கும். இது ரியல்மியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதிகாரப்பூர்வ ரியல்மி மொபைல்கள் ட்விட்டர் பக்கம் மற்றும் ரியல்மி நிகழ்வு தளத்திலும் கூடுதல் வெளியீட்டு அப்டேட்டுகளை சரிபார்க்கலாம். Realme X50 Pro 5G நிகழ்வு சிறப்பம்சங்கள் மற்றும் எங்கள் பக்கத்திலிருந்து மேலும் தொடர்புடைய உள்ளடக்கங்களுக்கு, கேஜெட்ஸ் 360 உடன் இணைந்திருங்கள்.

Realme X50 Pro 5G இன்று வெளியீடு: எதிர்பார்க்கப்படும் விலை, விவரக்குறிப்புகள்: 

இந்தியாவில் Realme X50 Pro 5G-யின் விலை ரூ.50,000-யாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், மேற்கூறிய விலை, போனின் அடிப்படை வேரியண்டிற்கா அல்லது அதன் டாப்-ஆஃப்-லைன் மாடலுக்கா என்பது தெளிவாக இல்லை. 

Realme X50 Pro 5G, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படும். ஆன்-போர்டு ஸ்னாப்டிராகன் X55 LTE, இந்த போன் டூயல்-மோட் (NSA+SA) 5G இணைப்பை வழங்குகிறது என்பதை உறுதி செய்யும். Realme X50 Pro ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா அடங்கும். இது 20x hybrid ஜூம் ஆதரவைக் கொண்டுள்ளது.

முன்பக்கத்தில், இந்த போனில் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் ஒரு சூப்பர் AMOLED டிஸ்பிளே மற்றும் hole-punch உள்ளது. இது இரண்டு கேமரா லென்ஸ்கள் கொண்டுள்ளது, அவற்றில் ஒன்று 32 மெகாபிக்சல் ஸ்னாப்பர் ஆகும். Realme X50 Pro 5G-யின் பேட்டரி திறனை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், 65W சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்டுவருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனை Rust Red மற்றும் Moss Green கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Top-end Snapdragon 865 SoC
  • 5G ready
  • Impressive display and sound quality
  • Extremely quick charging
  • Great value for money
  • Bad
  • 4K video and Night Mode need improvements
  • Relatively heavy and slippery
  • No wireless charging or IP rating
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 12-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4200mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.