Photo Credit: Poco
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Poco X7 5G செல்போன் சீரியஸ் பற்றி தான்.
Poco X7 5G செல்போன் சீரியஸ் விற்பனை இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் Poco X7 5G மற்றும் Poco X7 Pro 5G என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு வருகிறது. Flipkart மூலம் இந்த போன்கள் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இப்போது வரவிருக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புகள் வெளியாகி இருக்கிறது. இது ப்ரோ மாடலின் சிப்செட் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
Poco X7 5G மற்றும் Poco X7 Pro 5G ஆகியவற்றின் வடிவமைப்பு X தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டு செல்போன்கள் பற்றியும் Flipkart மைக்ரோசைட்டுகளிலும்பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த செல்போனின் பின் பேனலின் மேல் இடது மூலையில் வட்ட வடிவ கேமரா ஸ்லாட்டுகளுடன் கூடிய வட்ட வடிவ அமைப்பு வருகிறது. இரண்டு ஃபோன்களும் பிராண்டின் சிக்னேச்சர் மாடலான கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வருகிறது.
Poco நிறுவனத்தின் மற்றொரு பதிவில் Poco X7 Pro 5G ஆனது MediaTek Dimensity 8400-Ultra SoC மூலம் இயக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது. முன்பு வெளியான தகவல்களில் வெண்ணிலா மாடலில் MediaTek Dimensity 7300-Ultra சிப்செட் இருக்கும் என்று கூறப்பட்டது. இப்போதைக்கு Poco X7 5G வெள்ளி மற்றும் பச்சை வண்ண விருப்பங்களிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. ப்ரோ மாடலில் மட்டும் இரட்டை தொனியில் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Poco X7 5G செல்போன் சீரியஸ் 50 மெகாபிக்சல் பிரதான கேமராக்களைப் பெறும் என்று வடிவமைப்பு குறித்த டீஸர்கள் மூலம் தெரிய வருகிறது. ப்ரோ மாடல் சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வெண்ணிலா மாடல் 20 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் வரலாம். இது IP68-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பையும் பெறலாம் என தெரிகிறது.
பேஸிக் மாடல் Poco X7 5G ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன் 6.67-இன்ச் 120Hz AMOLED 1.5K டிஸ்ப்ளே பெறும். இதற்கிடையில், ப்ரோ மாடல் 6.67-இன்ச் CrystalRez 1.5K AMOLED திரையை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. Poco X7 மற்றும் X7 Pro முறையே 45W மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும். இவை முறையே 5,110mAh மற்றும் 6,000mAh பேட்டரிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்