Photo Credit: Twitter/ Poco India
போகோ எக்ஸ் 2 இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது. போகோ எக்ஸ் 2 பிப்ரவரி 4-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது பல முறை விற்பனைக்கு வந்துள்ளது. இது 2018-ல் வெளிவந்த போகோ எஃப் 1 மற்றும் ஷாவ்மி ஸ்பின்-ஆஃப் பிராண்டின் இரண்டாவது போனாகும்.
Set reminder in your calendar for the #SmoothAF sale of #POCOX2. Goes on sale tomorrow at 12 noon on @Flipkart.
— POCO India (@IndiaPOCO) March 16, 2020
RT if you're planning to buy one. pic.twitter.com/ClbDYQ5bW6
Poco X2-வின் அடிப்படை 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999-யாகவும், 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,999-யாகவும், அதன் டாப்-எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.19,999-யாகவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Pheonix Red, Atlantis Blue மற்றும் Matrix Purple ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
போக்கோ எக்ஸ் 2 Flipkart-ல் சில சலுகைகளுடன் மட்டுமே கிடைக்கிறது. நீங்கள் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளுடன் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ரூ.1000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டுகளுடன் கூடுதலாக 5 சதவீத தள்ளுபடியும் உள்ளது. மற்ற சலுகைகளில் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5 சதவீதம் அன்லிமிடெட் கேஷ்பேக் மற்றும் முதல் முறையாக ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்களுக்கு பிளிப்கார்ட் பரிசு வவுச்சராக பிளாட் ரூ.50 கேஷ்பேக் ஆகியவை அடங்கும்.
டூயல்-சிம் (நானோ) போக்கோ எக்ஸ் 2, MIUI 11 உடன் Android 10-ல் இயக்குகிறது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67 அங்குல முழு எச்டி + (1080 x 2400 பிக்சல்கள்) திரை மற்றும் 20: 9 என்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. போகோ எக்ஸ் 2 Qualcomm's ஸ்னாப்டிராகன் 730G SoC மற்றும் Adreno 618 GPU-வால் இயக்கப்படுகிறது. நீங்கள் 8GB வரை LPDDR4X RAM ரேம் பெறலாம்.
போக்கோ எக்ஸ் 2, 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜில் வருகிறது. இணைப்பிற்காக, USB Type-C வழியாக இந்த போன் சார்ஜ் செய்யப்படுகிறது, Wi-Fi 802.11 a/b/g/n/ac support, Bluetooth v5.0, a 3.5mm headphone jack, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் ஆகியவை அடங்கும். போகோ எக்ஸ் 2-வில் உள்ள பேட்டரி திறன் 4,500 எம்ஏஎச் ஆகும், இது 27W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் உள்ளது. 68 நிமிடங்களில் போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. 27W சார்ஜர் சாதனத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 165.3x76.6x8.79 மிமீ அளவு மற்றும் 208 கிராம் எடையுடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்