Photo Credit: Twitter/ Poco India
Poco X2 பிப்ரவரி 4-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிராண்ட் திங்களன்று வெளிப்படுத்தியது. Poco X2 விவரங்களை நிறுவனம் மறைத்து வைத்திருந்தாலும், அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, போனைப் பற்றிய சில தகவல்களை வெளியிடத் தொடங்கியுள்ளது. Poco X2-வானது Redmi K30 4G வேரியண்டின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருப்பதைப் பற்றிய வதந்திகள் துல்லியமானவை என்பதை, போனைப் பற்றிய தகவல்களின் முதல் பிட்கள் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும், உறுதிப்படுத்தல் பெற வெளியீட்டு நிகழ்வுக்காக இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
Poco X2, 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று போகோ இந்தியா செவ்வாயன்று ட்வீட்டில் அறிவித்தது. ட்வீட்டில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு விளம்பரப் படம், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரையும், பவர் பொத்தானின் ஒரு பகுதியாக இருக்கும் என்று காட்டுகிறது. நினைவுகூர, Redmi K30 4G வேரியண்டிலும் 120Hz டிஸ்ப்ளே மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது.
முன்னதாக, போகோ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அமைத்த டீஸர் பக்கத்தில், Poco X2-வில் Qualcomm Snapdragon chip, liquid cooling, USB Type-C port, 3.5mm audio jack இருப்பதை வெளிப்படுத்தியது. இவை அனைத்தும் Redmi K30 4G வேரியண்டிலும் உள்ளன.
Poco X2-வின் புதிய அம்சத்தை ஒவ்வொரு நாளும் அறிவிக்க போகோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, நாளை மேலும் தெரிந்துகொள்வோம்.
Poco X2 உண்மையில் Redmi K30 4G வேரியண்ட்டின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக மாறினால், dual hole-punch design, Qualcomm Snapdragon 730G SoC மற்றும் குவாட் ரியர் கேமராக்கள் கொண்ட 6.67-inch full-HD+ டிஸ்ப்ளேவைக் காணலாம். கூடுதலாக, இந்த போன் 27W fast charging, NFC, IR blaster உடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்