அறிமுகத்திற்கு முன்பே போகோ எஃப் 2 ப்ரோவின் விலை கசிந்தது!

அறிமுகத்திற்கு முன்பே போகோ எஃப் 2 ப்ரோவின் விலை கசிந்தது!

Photo Credit: 91Mobiles

போகோ எஃப் 2 ப்ரோ, 2018-ன் போகோ எஃப் 1-ன் தொடராக இருக்கும்

ஹைலைட்ஸ்
  • போகோ எஃப் 2 ப்ரோ சுமார் ரூ.46,000-க்கு அறிமுகப்படுத்தப்படும்
  • ரெட்மி கே 30 ப்ரோவுக்கு பதிலாக ஷாவ்மி இந்த போனை அறிமுகப்படுத்தலாம்
  • இந்த போன் ரெட்மி கே 30 ப்ரோவின் பின்புற பேனல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது
விளம்பரம்

போகோ எஃப் 2 ப்ரோ அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படலாம். சமீபத்திய அறிக்கை ஒன்று இந்த போன் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த போனை ஸ்பெயினில் அறிமுகப்படுத்த நிறுவனம் அழைப்பிதழ்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாக அறியப்படுகிறது. போகோ எஃப் 2 ப்ரோ மே 12 ஆம் தேதி சந்தைக்கு வரக்கூடும். இந்த போனின் விலை அறிமுகத்திற்கு முன்பே தெரிய வந்துள்ளது.

91 மொபைல்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், 128 ஜிபி ஸ்டோரேஜுடன் இந்த போனின் விலை 570 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.46,800) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரெட்மி கே 30 ப்ரோ சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஷாவ்மி இந்த போனை Poco எஃப் 2 புரோ என சீனாவுக்கு வெளியே அறிமுகப்படுத்தலாம். Poco F2 Pro நீலம், சாம்பல், ஊதா மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி கே 30 ப்ரோ சமீபத்தில் சீனாவில் நான்கு வண்ணங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

டூயல்-சிம் Redmi K30 Pro நிறுவனத்தின் MIUI 11 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்கும். இந்த போனில் 6.67 இன்ச் எச்டிஆர் 10+ சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஒரு ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 8 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில், எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் இருக்கும்.

ரெட்மி கே 30 ப்ரோ கேமராவில் 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 686 முதன்மை சென்சார் உள்ளது. முதன்மை கேமராவில் ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் உள்ளது. 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த போனில் செல்ஃபி எடுக்க 20 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் டூயல் பேண்ட் 5 ஜி (என்எஸ்ஏ + எஸ்ஏ), வைஃபை 6, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், என்எப்சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. போனின் உள்ளே 4,700 mAh பேட்டரி உள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Poco F2 Pro, Poco, Xiaomi, Redmi K30 Pro
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »