பெரும் பிரபலமான போகோ எஃப்1 வெற்றியை தொடர்ந்து, போகோ எஃப் 2 வெளியாகிறது. இதுகுறித்த தகவல்களை ஜீக்பெஞ்ச் தெரிவித்துள்ளது. போகோ எஃப் 2 ஸ்மார்ட்போனானது சியோமி குவால்கம் ஸ்நாப்டிராகன் 845SoCல் இயங்கும். இந்த போன் ஆண்டுராய்டு 9.0 பையில் இயங்குகிறது. இதன் முந்தைய மாடலான போகோ எஃப் 1, அசூஸ் சென்போன் 5Z மற்றும் ஓன்பிளஸ் 6 இணையாக இந்த போன் சந்தையில் பெயர் பெற்றது.
ஜீக்பெஞ்ச் வெளியிட்டுள்ள தகவலில், போகோ எஃப் 2 ஆண்டுராய்டு 9.0 பை மற்றும் ஸ்நாப்டிராகன் 845 கொண்டுள்ளது. போகோ எஃப் 1 போனானது சமீபத்தில் எம்ஐயூஐ 10 அப்டேட் கிடைத்தது.
சியோமி போகோ எஃப்2 போனானது, 6ஜிபி ரேம்/ 64ஜிபி உள்கட்ட சேமிப்பினைக் கொண்டுள்ளது. இதேபோல், 8ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலும் உள்ளது.
போகோ எஃப்1 ஸ்மார்ட்போனில் 6.18 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே மற்றும் 2.5டி வளைந்த கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பினை பெற்றுள்ளது. குவால்கம் ஸ்நாப்டிராகன் 845 SoC 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேமினைக் கொண்டுள்ளது. 12மெகா பிக்சல் சோனி IMX 363 பிரைமரி சென்சார், 5மெகா பிக்சல் செகண்டரி சென்சாரினைக் கொண்டுள்ளது.
போகோ எஃப்1 ஆனது 64ஜிபி, 128ஜிபி, 256ஜிபி ஸ்டோரேஜினைக் கொண்டுள்ளது மேலும் 256ஜிபி சேமிக்கும் திறன் கொண்ட மைக்ரோSD கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் 18w அதி வேகமாக சார்ஜ் ஏறும் திறன் கொண்ட 4000mAh பேட்டரியினை பெற்றுள்ளது. 6ஜிபி ரேம்/ 64ஜிபி உள்கட்ட சேமிப்பினைக் கொண்ட சியோமி போகோ எஃப்1-ன் விலை ரூ. 20,999 ஆகும். 6ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.28,999 ஆகும். போகோ எஃப் 2 விலை குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.
.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்