Photo Credit: Twitter/ Benjamin Geskin
தனது போகோ எஃவ் 1 ஸ்மார்ட் போன் மாடலை வெளியிட சியோமி நிறுவனம் தயாராகி வரும் நிலையில், சியோமி நிறுவனம் போகோ 2 எனப்படும் தனது நிறுவனத்தின் அடுத்த பாடலை வெளியிடும் என்ற தகவல் கசிந்துள்ளது.
ரூ.19,999ற்கு விற்பனை செய்யபடும் போகோ 1 யை தொடர்ந்து போகோ 2 என்ன புதிய அம்சங்கள் இருக்கும் என பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
போகோ 2-ல், வாட்டர் டிராப் ஸ்டைலில் டிஸ்பிளே இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இது சியோமி எம்.ஐ பிளேயை போல் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த புதிய வகை மாடலால் போகோ 2-ன் ஸ்கிரீன் இன்னும் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்புறம் இரண்டு கேமராக்கள் உள்ள நிலையில், கேமரா 1 போனின் இடதுபுறத்தின் உச்சத்திலும் மற்ற ஒன்று நடுவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைவிரல் ரேகை ரீடர் போனின் பின்புறம் வைக்கப்பட்டுள்ளது எனவும் இறுதியில் வெளிவரும் போது போகோ 1 விட நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 6 ஜிபி ரேம் மற்றும் ஆண்டிராய்டு 9 பையின் அப்டேட் கிடைக்கும் என பல தகவல்கள் கசிந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான போகோ எஃப்1 ரூ. 20,999 க்கு விற்பனை செய்யப்பட்டது. சியோமி நிறுவனத்தின் விலை தள்ளுபடியால் தற்போது ரூ1000 குறைந்து இருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்