நான்கு ரியர் கேமராக்களுடன் வருகிறதா ஓப்போ ரெனோ 3 ஏ?! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 23 ஏப்ரல் 2020 13:33 IST
ஹைலைட்ஸ்
  • ஓப்போ ரெனோ 3 ஏ 4,025 எம்ஏஎச் பேட்டரியுடன் வர முனைகிறது
  • ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டதை ஓப்போ இன்னும் உறுதிப்படுத்தவில்லை
  • ஓப்போ ரெனோ 3 ஏ-வின் விலையை அறிக்கை குறிப்பிடவில்லை

ஓப்போ ரெனோ 3 ப்ரோ மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

விரைவில் வரவிருக்கும் ஓப்போ ரெனோ 3 ஏ போனின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஓப்போ ரெனோ 3 ஏ என்று பெயரிடப்படும் இந்த சீரிஸில் நிறுவனம் மற்றொரு போனில் செயல்பட்டு வருவதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு தேதி தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

Oppo Reno 3A-வின் கூறப்படும் விவரக்குறிப்பை பிரைஸ்பாபா டிப்ஸ்டர் இஷான் அகர்வாலுடன் பகிர்ந்துள்ளார். இருப்பினும், போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

போனின் விவரங்கள்: (எதிர்பார்க்கப்படுபவை)

அந்த அறிக்கையின்படி, Oppo ரெனோ 3 ஏ ஆண்ட்ராய்டு அடிப்படையிலான கலர்ஓஎஸ் 7.1-ல் இயங்குகிறது. போனில்  முழு HD + தெளிவுத்திறனுடன் 6.44 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 செயலியுடன் 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது. 

போனின் குவாட் ரியர் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா ஆகியவை உள்ளது. மேலும், 2 இரண்டு மெகாபிக்சல் சென்சார்கள் உள்ளன. இவை சதுர தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி சென்சார் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓப்போ ரெனோ 3 ஏ, 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதில் 4,025 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் ஆதரவு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த போன், 161x74x8.2 மிமீ மற்றும் 175 கிராம் எடையுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. 

ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை ஓப்போ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 6.44-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4025mAh
OS Android
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo, Oppo Reno 3, Oppo Reno 3A, Oppo Reno 3A specifications
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  2. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  3. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  4. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
  5. Vivo Y51 Pro 5G இந்தியாவில் அறிமுகம் – 7,200mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா: விலை மற்றும் விவரங்கள்
  6. iPhone 17 Pro கேமரா சோதனையில் Samsung Galaxy S26 Ultra-வை முந்தியது: DxOMark மதிப்பீடு
  7. OnePlus 15T வெள்ளை நிற மாடல் மற்றும் டிஸ்ப்ளே அம்சங்கள் வெளியீடு; சீனாவில் Pre-Order தொடக்கம்
  8. OnePlus Nord Buds 4 Pro இந்திய வெளியீட்டு தேதி, முக்கிய அம்சங்கள் மற்றும் கிடைக்கும் விவரங்கள் அறிவிப்பு
  9. Realme Note 80 6,300mAh பேட்டரி, 6.74-இஞ்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகம்: விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியானது
  10. Lava Bold 2 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு; Under-Display Fingerprint Scanner உறுதி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.