Photo Credit: Vivo
கடந்த 2018ஆம் ஆண்டில், ஸ்மார்ட்போன் விவகாரத்தில் நாட்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அறிமுகமானது, எனினும் பாப் - ஆப் கேமராக்கள் மட்டும் நாம் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இந்நிலையில், சீனா டிப்ஸ்டர் இணையதளத்தில், ஓப்போ r19, விவோ x25 உள்ளிட்ட போன்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த தகவலில், இரண்டு போன்களிலும் பின்பக்கம் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இரண்டு மாடல்களிலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், போன் டிஸ்பிளேவில் நாட்ச்சை தவிர்க்க, தற்போது பாப்-ஆப் கேமரா கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல் டூயல் டிஸ்பிளே ஆப்ஷனும் கிடைக்கிறது. இதன் மூலம் டிஸ்பிளே முழுவதும் திரை இருக்கும் வரையில் இருக்கும்.
இதுகுறித்து சீன இணையதளமான டிப்ஸ்டரில், ஓப்போ r19, விவோ x25 மாடல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓப்போவில் பேனலின் நடுவில் இருக்கும் பாப்-ஆப், விவோவில் வலது பக்கம் பாப் -ஆப் உள்ளது. இதில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருந்தால் ஓஎல்இடி டிஸ்பிளே கொண்டிருக்கும்.
வாட்டர் டிராப் நாட்சஸ், பன்ச்-ஹோல் கேமரா உள்ளிட்ட புதிய வசதிகளால் டிஸ்பிளே முழுவதும் திரை அனுபவத்தை பெறலாம். ஸ்லைடரை தவிர்த்து டூயல் டிஸ்பிளே ஆப்ஸன்களும் வர உள்ளன. கடந்த வருடம் வெளிவந்த ஓப்போ எக்ஸ் போனில் ஸ்லைடர் கேமரா கொண்டிருந்தது. எனினும் அதன் வடிவமைப்பு பயன்படுத்துவதற்கு எளிமையானதாக இருக்கவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்