6.4 இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 660-யுடன் அறிமுகமானது ஒப்போ ஆர்17!

விளம்பரம்
Written by Sumit Chakraborty மேம்படுத்தப்பட்டது: 31 அக்டோபர் 2018 16:49 IST
ஹைலைட்ஸ்
  • ஒப்போ ஆர்17 ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதில் உள்திரை ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.
  • இதன் இந்திய விலை ரூ. 25,500 ஆகும்.

ஒப்போ ஆர்17 நியோ நீலம் மற்றும் சிகப்பு நிறங்களில் கிடைக்கின்றன.

சீன தயாரிப்பு நிறுவனமான ஒப்போ அதன் தயாரிப்புகளில் ஒன்றான ஒப்போ ஆர்17ல் தொடர்ந்து புதிய ரக போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சீனாவில் ஒப்போ ஆர்17 அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஜப்பானில் ஒப்போ ஆர்17 நியோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் முக்கியம்சம் உள்திரை ஃபிங்கர் பிரிண்ட் சென்சாராகும். இதனைத்தவிர, 6.4 இன்ச் திரையுடன் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் உட்பட மேலும் பல உள்ளன. இதன் முந்தைய மாடல் உடன் ஒப்பிடும்போது பேட்டரி, ரேம் மற்றும் கேமிராவில் ஒரு சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஒப்போ ஆர்17ல் 3,6002mAh பேட்டரி, 4ஜிபி ரேம், இரட்டை கேமிரா வசதி உள்ளது அவை, 16 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் சென்சார் கொண்டவை.

ஒப்போ ஆர்17 கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து பலமுறை தகவல் கசிந்தபின் ஒப்போ நிறுவனம் உள்திரை ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் 8ஜிபி ரேம் போன்ற அம்சங்கள் இருப்பதை உறுதி செய்தது. ஒப்போ ஆர்17 ப்ரோவில் டிரிபிள் கேமிரா மற்றும் விஓஓசி சார்ஜ் சப்போர்ட் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒப்போ ஆர்17 நியோவின் அம்சங்கள் தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஒப்போ கே1 உடன் ஒத்துப்போகும்.

ஒப்போ ஆர்17 நியோவின் விலை

ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஒப்போ ஆர்17ன் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி 25,500 ஆகும். இதற்கு பல மாதத் தவணை முறைகளை இந்நிறுவனம் அளிக்கிறது. ஒப்போ ஜப்பானின் இணையதளத்தில் இதுகுறித்து வேறெந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. சீனாவில் ஒப்போ ஆர்17 8ஜிபி ஏம்/ 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.35,600 ஆகும். ஒப்போ ஆர்17 6ஜிபி ரேம்/ 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட போன் 32,600 ஆகும். மேலும் ஒப்போ ஆர்17 ப்ரோ சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி, 43,800 ஆகும்.

ஒப்போ ஆர்17 நியோவின் முக்கியம்சங்கள்

ஒப்போ ஆர்17 நியோவில் கலர்ஸ் 5.2வினை அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் திரையுடன் ஹெச்.டி AMOLED திரை உள்ளது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 ப்ராசஸரை கொண்டுள்ளது. இதில் 4ஜிபி ரேம் வேரியண்ட் உள்ளது.

ஒப்போ ஆர்17 நியோ, 16 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 2 மெகா பிக்சல் செகண்டரி சென்சாரைப் பெற்றுள்ளது. ஒப்போ ஆர்17 நியோவின் ஸ்மார்ட்போனின் அளவுகள் 158.3x75.5x7.4mm மற்றும் எடை 156 கிராம் ஆகும்.
 

 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 25-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3600mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo R17 Neo, Oppo R17 Neo Price, Oppo R17 Neo Specifications, Oppo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.