தனது மடங்கும் போனின் மாதிரியை வெளியிட்ட ஓப்போ!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 26 பிப்ரவரி 2019 16:25 IST
ஹைலைட்ஸ்
  • அறிமுகமானது ஓப்போவின் மடங்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு!
  • இந்த அப்டேட்டின் புகைப்படம் மட்டுமே பகிரப்பட்டது!
  • இந்த ஸ்மார்ட்போன் கேமரா மாடியுல் கொண்டு வெளியாகிறது.

இரண்டு டிஸ்பிளே பேனல்களை கொண்ட ஓப்போவின் மடங்கும் ஸ்மார்ட்போன்

Photo Credit: Weibo/ Brian Shen

சாம்சங், ஹூவாய் நிறுவனங்கள் தங்களது புதிய அறிமுகங்களான 'மடங்கும் ஸ்மார்ட்போன்களை' வெளியிட்டதை தொடர்ந்து ஓப்போ நிறுவனமும் மடங்கும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஓப்போ நிறுவனத்தின் துனை தலைவர் பிரியன் ஷேன் கடந்த திங்கட்கிழமையன்று இந்த புதிய போனின் ஃபரோடோடைப் மாதிரியை வெளியிட்டார்.

ஏற்கெனவே அறிமுகமான ஹூவாய் மேட் X மாடலைப்போலவே, ஓப்போவின் இந்த மாதிரி ஃபரோடோடைப் வெளியாகியுள்ளது.
 

ஓப்போவின் ஃபோல்டபள் போனின் அமைப்புகள்:

ஓப்போ தளத்தில் வெளியான புகைப்படத்தில் வளையும் தன்மையுடைய திரையை கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. இந்த போனின் திரை 8 இஞ்ச் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பேனலின் ஒரு பக்கத்தில் அடர்த்தியான பார் ஒன்று இருப்பதும் அதில் கேமராக்கள் இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

மேலும் செஃல்பி கேமராக்கு ஏற்றவாறு ஒரு நாட்சுடன் இந்த மடங்கும் போன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓப்போவின் இந்த மாதிரி புகைப்படத்தில் இரண்டு எல்லிடி டார்ச்லைட்டுகள் இருப்பதையும் நம்மால் பார்க முடிகிறது.

உள்ளே கலர் ஓஎஸ் மென்பொருள் கொண்டு இந்த போன் செயல்படுவதாகவும், இந்தியாவில் ரூ. 2,09,400 க்கு வெளியாகும் ஹூவாய் மேட் X அல்லது ரூ. 1,41,000 க்கு வெளியாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஆகிய மடங்கும் போன்களை விட அதிக விலையிலே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. YouTube பங்குதாரர் திட்ட தகுதி வரம்புகள் புதிய படைப்பாளர்களுக்கு கூடுதல் நிபந்தனைகளுடன் உயர்த்தப்பட்டுள்ளன
  2. அமேசான் ஃபிரீடம் சேல் 2026: Asus, HP, Lenovo கேமிங் லேப்டாப்களுக்கு ரூ.1 லட்சத்திற்குள் சிறந்த சலுகைகள்!
  3. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 70,000-க்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள்
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: மிரர்லெஸ் கேமராக்களில் சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: பிரீமியம் ஹெட்ஃபோன்களில் சிறந்த சலுகைகள்
  6. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: JBL, சோனி, போட் மற்றும் பல பிராண்டுகளின் சவுண்ட்பார்களில் சிறந்த சலுகைகள்
  7. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ஹெட்ஃபோன்களுக்கான சிறந்த சலுகைகள்
  8. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: சாம்சங், ஒன்பிளஸ், ஷாவ்மி டேப்லெட்களுக்குச் சிறந்த சலுகைகள்!
  9. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: HP, கேனான் பிரிண்டர்களுக்குச் சிறந்த தள்ளுபடிகள்!
  10. ஆகஸ்ட் 14 அறிமுகத்திற்கு முன்பே Moto G Max-ன் விவரங்கள் மற்றும் வண்ணங்கள் இந்தியாவில் வெளியாகின
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.