'ஸ்னாப்டிராகன் 855 SoC' கொண்ட ஓப்போ போன் பற்றிய தகவல் கசிவு!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 9 மார்ச் 2019 13:43 IST
ஹைலைட்ஸ்
  • 8GB ரேம் கொண்ட போனின் தகவல் கசிந்தது!
  • போனின் புகைப்படம் மற்றும் முக்கிய தகவல்கள் கசிவு
  • ஓப்போ ஃபயின்ட் Z விரைவில் வெளியாகும் என தகவல்.

16 மெகா பிக்சல் செஃல்பி கேமராவும் இந்த போனில் உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 855 Soc உடன் ஓப்போவின் பெயரில் ஒரு மர்மமான ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. ஓப்போவின் துணை இயக்குநர், பிரையன் ஷென், ஓப்போ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ஸ்னாப்டிராகன் 855 Socயை கொண்டிருக்கும் என தகவலை சமீபத்தில் தெரிவித்த நிலையில் தற்போது இந்தப் புதிய அப்டேட் வந்துள்ளது. 

மேலும், நிறுவனம் சார்பில் தெரிவித்த தகவல்படி, இந்த புதிய தயாரிப்பில் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் கேமரா (Hybrid Optical Zoom Camera) வசதி இருக்கும் எனப்படுகிறது. இந்தத் தயாரிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படலாம் என்றும் அது ஓப்போ 'ஃபைண்டு Z' என பெயரிப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இணையத்தில் கசிந்துள்ள புகைப்படத்தில் 'ஓப்போ மாடல் எண்: OP46C3' என குறிப்பிடப்பட்டதால் இந்த பெயரிடப்படாத போன் ஓப்போ நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்க வாய்புள்ளது எனக் கூறப்படுகிறது. அந்த போனின் புகைப்படத்துடன் சில முக்கிய குறிப்புகளான 8 மட்டும் 256 ஜிபி ரேம் மற்றும் முழு ஹெச்டி திரை உள்ளதாக தகவலும் வெளியாகியுள்ளது.

16 மெகா பிக்சல் செஃல்பி கேமராவும் இந்த போனில் உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பின்புற கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை 48 மெகா பிக்சல் சென்சாரும் 4 இன் 1 பிக்சல் தொழிநுட்பமும் பெற்றுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த போனில் 4,065mAh பேட்டரி பவரும் இருக்க வாய்ப்புள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo Find Z, Oppo, AnTuTu
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ரெனோ 15A 5G 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  2. அமேசான் பிரைம் டே 2026 விற்பனை தேதிகள் அறிவிப்பு, பிரைம் மெம்பர்ஷிப் விலை ரூ. 999 ஆகக் குறைந்தது
  3. அடுத்த பிளாக்ஷிப் போன்களுக்காக எக்ஸினோஸ் 2700 உருவாக்கத்தை சாம்சங் நிர்வாகி உறுதிப்படுத்தியதாக தகவல்
  4. மெமரி சிப் பற்றாக்குறைக்கு மத்தியில் ஐபோன், மேக் விலைகளை ஆப்பிள் உயர்த்தக்கூடும், டிம் குக் கூறுகிறார்
  5. ஒன்பிளஸ் Nord CE 6 போன்ற அதே பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் N6
  6. ஆண்ட்ராய்டு ஹோம் ஸ்கிரீன் மூலம் விரைவாக அணுக வாட்ஸ்அப் வாய்ஸ் நோட் விட்ஜெட்டில் வேலை செய்கிறது
  7. கூகுளின் ஆண்ட்ராய்டு 17 அப்டேட் இந்த பிக்சல் சாதனங்களுடன் இணக்கமானது: முழுமையான பட்டியலைப் பார்க்கவும்
  8. ஜெமினி, கிளாட் வளர்ச்சியால் சாட்ஜிபிடி சந்தைப்பங்கு முதல்முறையாக 50% கீழ் சரிந்தது
  9. கேலக்ஸி போன்களுக்கு AI செல்லப்பிராணி சுகாதார கருவியை விவாடெக் 2026 இல் அறிமுகம் செய்தது சாம்சங்
  10. மோட்டோரோலா ரேஸர் ஃபோல்டு மதிப்பாய்வு:இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகச்சிறந்த முதல் தலைமுறை மடிக்கக்கூடிய போனா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.