Oppo Find X9 Pro வருது! பிரீமியம் லுக், பிரம்மாண்ட கேமரா! இந்தியாவில் நவம்பரில் லான்ச் கன்ஃபார்ம்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 20 அக்டோபர் 2025 23:53 IST
ஹைலைட்ஸ்
  • Launch: அக்டோபர் 28-ல் உலகளாவிய அறிமுகம். இந்தியாவில் நவம்பரில் வெளியாகும
  • Chip & Camera: MediaTek Dimensity 9500 சிப் மற்றும் 200MP பெரிஸ்கோப் டெலி
  • Chip & Camera: MediaTek Dimensity 9500 சிப் மற்றும் 200MP பெரிஸ்கோப் டெலி

Oppo Find X9 series features a Hasselblad-tuned quad-rear camera setup Oppo Find X9 தொடரில் Hasselblad-டியூன் செய்யப்பட்ட குவாட்-ரியர் கேமரா அமைப்பு உள்ளது

Oppo நிறுவனம் அவங்களுடைய அடுத்த பிளாக்ஷிப் சீரிஸான Oppo Find X9 மாடல்களை இந்தியாவுல லான்ச் பண்றத கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க. இந்த Oppo Find X9 Pro மற்றும் Find X9 மாடல்கள், சீனாவுல ஏற்கனவே அறிமுகமாகிவிட்டது. இப்போ உலகளாவிய (Global) லான்ச் ஈவென்ட் அக்டோபர் 28-ஆம் தேதி நடக்குது. இதைத் தொடர்ந்து, இந்தியன் மொபைல் காங்கிரஸ் (IMC 2025) ஈவென்ட்ல சொன்ன மாதிரி, இந்த போன்கள் நவம்பர் மாசம் நம்ம இந்தியாவுல கண்டிப்பா லான்ச் ஆகும்னு Oppo உறுதி செஞ்சிருக்காங்க. ஒரு லீக்ஸ்ல நவம்பர் 18-ஆம் தேதி லான்ச் இருக்கலாம்னு கூட தகவல் வந்திருக்கு.

பவர் மற்றும் டிஸ்பிளே

இந்த சீரிஸ் முழுக்க முழுக்க MediaTek Dimensity 9500 சிப்செட்ல இயங்குது. இது ஒரு 3nm பிளாக்ஷிப் சிப்செட். பெர்ஃபார்மன்ஸ் செம ஃபயரா இருக்கும்.

  • Find X9 Pro மாடல்ல 6.78-inch டிஸ்பிளே இருக்கு.
  • Find X9 மாடல்ல 6.59-inch டிஸ்பிளே இருக்கு.

இந்த ரெண்டுலயுமே 1.5K ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் 3600 nits உச்ச பிரகாசம் இருக்கு. அதோட, டிஸ்பிளேயைச் சுத்தி இருக்கிற பெசல் (Bezel) வெறும் 1.15mm மட்டும்தான்.

பேட்டரியைப் பொறுத்தவரைக்கும் பெரிய அப்கிரேட்! Find X9 Pro-ல 7,500mAh பேட்டரியும், Find X9-ல 7,025mAh பேட்டரியும் இருக்கு. ரெண்டுலயுமே 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் இருக்கலாம்னு சொல்லப்படுது. இது ஒரு நாள் முழுக்க தாங்கும்னு Oppo சொல்றாங்க.
கேமராதான் மாஸ்
Find X சீரிஸ்-னா கேமராதான் முக்கியம்.

  • Find X9 Pro-ல 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கு! அதோட 50MP பிரைமரி மற்றும் 50MP அல்ட்ரா-வைட் கேமரா இருக்கு.
  • Find X9 மாடல்ல 50MP பிரைமரி, 50MP அல்ட்ரா-வைட் மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கு.
  • இந்த கேமராக்கள் எல்லாமே புகழ்பெற்ற Hasselblad நிறுவனத்தோட கூட்டு முயற்சியில் டியூன் செய்யப்பட்டிருக்கு.
  • இந்தியாவுல என்னென்ன கலர்கள் வரும்னு Oppo உறுதி செஞ்சிருக்காங்க:
  • Oppo Find X9: Titanium Grey மற்றும் Space Black கலர்களில் வரும்.
  • Oppo Find X9 Pro: Silk White மற்றும் Titanium Charcoal கலர்களில் கிடைக்கும்.

விலை எதிர்பார்ப்பு: இந்தியாவில் Find X9 மாடலின் விலை சுமார் ₹65,000 ரேஞ்ச்ல இருந்து ஆரம்பிக்கலாம். Find X9 Pro மாடல் ₹1,00,000-க்கும் கம்மியா வர வாய்ப்பிருக்கு. மொத்தத்துல, Oppo Find X9 சீரிஸ் இந்த வருஷம் இந்தியன் பிளாக்ஷிப் மார்க்கெட்டே அதிர வைக்க போகுது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo, Oppo Find X9, Find X9 Pro

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G விலை, வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் அறிவிப்பு
  2. சோனி WF-1000XM6 உடன் சோனி 1000X தி கலெக்‌ஷன் DSEE அல்டிமேட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  3. ஒன்பிளஸ் N6x இந்தியாவில் 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  4. இந்தியாவில் eSIM மற்றும் பிசிக்கல் சிம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  5. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  6. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  7. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
  8. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  9. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
  10. ஜியோ ஹோம் 2 மாத திட்டத்தில் 1 மாதம் இலவசம்: 100Mbps இன்டர்நெட், 12 OTT ஆப்ஸ்கள் இலவசம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.