90Hz டிஸ்ப்ளேவுடன் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 21 மே 2020 14:35 IST
ஹைலைட்ஸ்
  • ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ அறிமுகம்
  • 5 ஜி போன் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 12 ஜிபி ரேம் உடன் வருகிறது
  • இதன் விலை யூரோ 699 (சுமார் ரூ.58,000)

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ, ஸ்டாரி ப்ளூ மற்றும் மூன்லைட் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ  ஜெர்மனியில் அறிமுகமாகியுள்ளது. இந்த போனில்  5 ஜி ஆதரவு உள்ளது. ஓப்போ போன் 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்ட வளைந்த டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும், பல அடுக்கு குளிரூட்டும் முறையைக் கொண்டுள்ளது. 


போனின் விலை:

ஓப்போ Find X2 Neoவின் விலை ஜெர்மனியில் யூரோ 699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.58,000) ஆகும். இந்த போன் ஸ்டாரி ப்ளூ மற்றும் மூன்லைட் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும். இந்தியா வெளியீட்டு தேதியை நிறுவனம் அறிவிக்கப்படவில்லை. 


போனின் விவரங்கள்:

இது ஒற்றை சிம் ஸ்மார்ட்போனாகும். இதில் 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் கலர்ஓஎஸ் 7-ல் இயங்கும். போனின் உள்ளே குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

Oppo ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ஹூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டர் உள்ளது. செல்ஃபி எடுக்க 32 மெகாபிக்சல் ஸ்னாப்பர் உள்ளது. 

இணைப்பிற்காக, இந்த போனில் 5 ஜி, புளூடூத் 5.1, வைஃபை, என்எப்சி மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 4,025 எம்ஏஎச் பேட்டரியும் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 ஆதரவு உள்ளது. போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ எடை 171 கிராம் ஆகும்.

 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4025mAh
OS Android 10
Resolution 2400x1080 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Poco X8 Pro Series இந்தியாவில் அறிமுகம்: 9,000mAh பேட்டரி, 50MP கேமரா – விலை & விவரங்கள் இதோ உங்களுக்காக
  2. OnePlus 15 மற்றும் OnePlus 13s-க்கு OxygenOS 16 அப்டேட்: மார்ச் 2026 பாதுகாப்பு புதுப்பிப்பு
  3. Poco X8 Pro Series இந்திய விலை லீக்; அறிமுகத்திற்கு முன் விவரங்கள் வெளியீடு
  4. iQOO Z11 Geekbench-ல் வந்தது; MediaTek Dimensity 8500 செயலியுடன் சீனாவில் விரைவில் அறிமுகம்
  5. Instagram DM-களில் End-to-End Encryption நீக்கம்: இது என்ன என உங்களுக்கு தெரியுமா?
  6. AirPods Max 2 இந்தியாவில் அறிமுகம் – H2 சிப், Adaptive Audio, 20 மணி நேர பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள்
  7. OnePlus Nord 6 Series இந்திய அறிமுகம் டீஸ்; OnePlus Nord CE 6 BIS தரவுத்தளத்தில் கிடைக்கும்
  8. Realme P4 Lite 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; வடிவமைப்பு மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியீடு
  9. iQOO Z11x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7,200mAh பேட்டரி, 50MP கேமரா
  10. MacBook Neo-க்கு டச் ஸ்கிரீன் அப்கிரேடு வர வாய்ப்பு குறைவு; Mark Gurman தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.