Oppo A92s விவரங்கள் வெளியாகின! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 14 ஏப்ரல் 2020 13:27 IST
ஹைலைட்ஸ்
  • Oppo A92s TENAA சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது
  • இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கலாம்
  • Oppo A92s 120Hz டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Oppo A92s டூயல் செல்பி கேமராக்களுடன் வரக்கூடும்

Photo Credit: TENAA

ஓப்போ நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போனாக Oppo A92s இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன், கீக்பெஞ்ச் பட்டியல் மற்றும் TENAA சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. 


Oppo A92s விவரங்கள் (எதிர்பார்க்கப்படுபவை)

Oppo A92s-ன் மாடல் எண் PDKM00 என்று நம்பப்படுகிறது. இந்த போன் Android 10-ல் இயக்கும் என்றும், ஆக்டா கோர் MT6873 SoC-யால் இயக்கப்படும் என்றும், டைமன்சிட்டி 800 5 ஜி சிப்செட்டாக இருக்கக்கூடும் என்றும் கீக்பெஞ்ச் பட்டியல் காட்டுகிறது. 

இந்த போனின் 6.57 அங்குல (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்பிளேவை TENAA சான்றிதழ் வலைத்தளத்தில் காணலாம். CPU அதிர்வெண் 2.0GHz என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போன் 6 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ஆகிய ரேம் வேரியண்டுகளையும், 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களையும் கொண்டிருக்கும். 

Oppo A92s-ல் மொத்தம் ஆறு கேமராக்கள் உள்ளன. பின்புற கேமராக்களில் 48 மெகாபிக்சல் ஷூட்டர், 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன. முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டர்கள் ஹோல்-பஞ்ச் வடிவமைப்பில் வைக்கப்பட்டுள்ளன என்பதை TENAA பட்டியல் காட்டுகிறது.

இந்த போன் 3,890mAh பேட்டரி மற்றும் Wi-Fi, LTE, VoLTE, Bluetooth, GPS அம்சங்களுடன் வருகிறது. இந்த போன் 163.8x75.5x8.1 மிமீ அளவு மற்றும் 184 கிராம் எடையைக் கொண்டிருக்கும் என பட்டியலிடப்பட்டுள்ளது. ஒரு போஸ்டர் Oppo A92s 120Hz டிஸ்பிளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo, Oppo A92s, Oppo A92s Specifications
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஓப்போ F33 5G, ஓப்போ F33 ப்ரோ 5G ரவுண்டப்: அறிமுக தேதி, வடிவமைப்பு, வண்ண விருப்பங்கள், விவரக்குறிப்புகள்
  2. விவோ T5 ப்ரோ 5G ரவுண்டப்: இந்தியாவில் வெளியீட்டு தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  3. ஹூவாய் புரா 90 புரோ மற்றும் புரோ மேக்ஸ் போன்களின் வடிவமைப்பு, நிறம் மற்றும் சேமிப்பு விவரங்கள் உறுதியானது
  4. இன்ஸ்டாகிராமில் கருத்துகளை (Comments) எடிட் செய்யும் வசதி: 15 நிமிட கால அவகாசம் அறிமுகம்
  5. மார்ச் 2026 இந்திய போன் அறிமுகங்கள்: சியோமி 17 அல்ட்ரா, போகோ X8 ப்ரோ சீரிஸ், மோட்டோரோலா எட்ஜ் 70 மற்றும் பல
  6. கிளாட் மைத்தோஸ் விளக்கம்: ஆந்த்ரோபிக்கின் சைபர் செக்யூரிட்டி AI மாடல் பற்றி நீங்கள் அறிய வேண்டிய அனைத்தும்
  7. ஐபோன் 18 ப்ரோ: சிறிய டைனமிக் ஐலேண்ட் வசதியுடன் பல புதிய வடிவமைப்புகளை ஆப்பிள் நிறுவனம் சோதித்து வருகிறது
  8. சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு: போல்ட் 8 அறிமுக விவரங்கள் கசிவு; தேதி மற்றும் இடத்தை இங்கே காணுங்கள்
  9. மோட்டோ ஜி ஸ்டைலஸ் (2026) அறிமுகம்: ஆக்டிவ் ஸ்டைலஸ் மற்றும் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் வசதி
  10. ஐபோன் 18 முந்தைய பதிப்பின் அதே வடிவமைப்பைத் தக்கவைக்கும்; ஐபோன் ஏர் 2 அறிமுக காலவரிசை குறித்த தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.