டூயல் ரியர் கேமராக்களுடன் ஓப்போ ஏ 12 அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 21 ஏப்ரல் 2020 10:45 IST
ஹைலைட்ஸ்
  • ஓப்போ ஏ 12, 6.22 இன்ச் எச்டி + டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது
  • இது 13 மெகாபிக்சல் கேமரா & 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரைக் கொண்டுள்ளது
  • போனில் உள்ள செல்ஃபிகள் 5 மெகாபிக்சல் முன் கேமராவால் கையாளப்படுகின்றன

ஓப்போ ஏ 12 பின்புற பேனலில் டைமண்ட்-கட் வடிவத்தைக் கொண்டுள்ளது

ஓப்போ நிறுவனத்தின் புதிய ஓப்போ ஏ 12 அறிமுகமாகியுள்ளது. இந்த போன் டூயல் பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. போனின் விலை மற்றும் விவரங்களுக்கு இங்கே படிக்கவும். 


ஓப்போ ஏ 12 விலை: 

Oppo A12-ன் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை இந்தோனேசியாவில் ஐடிஆர் 2,499,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,300) ஆகும். ஒப்போ வலைத்தளம் போனின் 3 ஜிபி + 32 ஜிபி பதிப்பையும் பட்டியலிடுகிறது. இந்த போன் கருப்பு மற்றும் நீல கலர் ஆப்ஷன்களில் வருகிறது.    

ஓப்போ ஏ 12 பின்புறத்தில் வழக்கமான வைர போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளது

ஓப்போ ஏ 12 விவரங்கள்:

Oppo ஏ 12-ல் டூயல்-சிம் (நானோ) ஸ்லாட் உள்ளது. இது Android Pie உடன் கலர்ஓஎஸ் 6.1.2-ல் இயக்குகிறது. இந்த போன், 6.22 இன்ச் எச்டி + (720x1,520 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது, 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 35 SoC-யால் இயக்கப்படுகிறது.

போனின் டூயல் ரியர் கேமரா அமைப்பில், 13 மெகாபிக்சல் பிரதான ஸ்னாப்பர், depth sensing-க்கு 2 மெகாபிக்சல் கேமரா ஆகியவை உள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பர், வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்சில் உள்ளது. 

போனில், 64 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இதில் 4,320 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo, Oppo A12, Oppo A12 specifications, Oppo A12 price
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ரெனோ 16 இந்திய அறிமுகம்; புதிய ஹெட்செட், பப்பிள் அசிஸரியுடன் வரக்கூடும்
  2. இந்தியாவில் ரூ. 15,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்: மோட்டோ G37 பவர் முதல் போகோ C85 மற்றும் பல
  3. சென்ஹைசர் HD 480 ப்ரோ பிளஸ் விமர்சனம்: அமைதியாகக் கவரும் திறமை
  4. வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு அம்சங்கள்
  5. ஜியோ AI கால் ஏஜென்ட் விளக்கம்: இது என்ன, எப்படி வேலை செய்கிறது, இதன் அம்சங்கள் மற்றும் பல
  6. டால்பி அட்மாஸ், 50W ஸ்பீக்கர்களுடன் ஹேயர் HQLED P7 புரோ ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்
  7. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது, அமேசானில் உள்ள மைக்ரோசைட் வடிவமைப்பை உணர்த்துகிறது
  8. 50MP கேமராவுடன் ரெட்மி டர்போ 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை சலுகைகள்
  9. ஒப்போ ரெனோ 16 உடன் ரெனோ 16c மாடலும் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு: விவரக்குறிப்புகள் கசிந்தன
  10. 6,500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC உடன் விவோ Y6e 5G அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.