12ஜிபி ரேம், 48MP கேமராவுடன் அசத்தலாக விற்பனைக்கு வரும் OnePlus Nord!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 18 ஜூலை 2020 13:40 IST
ஹைலைட்ஸ்
  • 90Hz AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது இந்த போன்
  • இரண்டாவது முன்புற கேமரா 105 டிகிரியில் படம் எடுக்கும்
  • முதன்மை கேமரா 48 மெகா பிக்சல் வசதி கொண்டது

வரும் 21 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம், 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 12 ஜிபி ரேமுடன் கூடிய அட்டகாசமான ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. இதிலுள்ள சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப வசதிகள் குறித்த விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து  நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் வரும் 21 ஆம் தேதி அறிமுகமாகிறது. இது அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே பல்வேறு சிறப்பம்சங்கள், விலை மதிப்பீடுகள் ஆன்லைனில் கசிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபோரம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒன்பிள்ஸ் நார்டு ஸ்மார்ட்போனில் சோனி IMX586 சென்சார்,  f/1.75 அபாச்சருடன் கூடிய 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. OIS எனப்படும் ஆப்டிக்கல் இமெஜ் ஸ்டெபிலிஷேன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தவிதமான அதிர்வுகளும் இல்லாமல், மிகத்துல்லியமாக போட்டோ எடுக்க முடியும். 

இந்தப் பிரைமரி கேமராவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 5 மெகா பிக்சல் டெப்த் கேமரா, மக்ரோ சென்சார் ஆகியவை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. ஆக மொததம் நான்கு விதமான பிரைமரி கேமராக்கள் உள்ளன. இதுதவிர, 105 டிகிரி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் செல்ஃபி கேமரா, 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் வழங்கப்படுகிறது.  இதன் மூலம் செல்ஃபி கேமராவிலேயே 105 டிகிரி கோணத்தில் போட்டோக்கள், வீடியோக்களை அட்டகாசமாக எடுக்க முடியும்

மேலும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G SoC பிராசசர், அமோலெட் டிஸ்பிளே, 4,115 mAh பேட்டரி சக்தி, 30W வார்ப் சார்ஜர் ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன. முன்னதாக 7 மணி நேரம் சார்ஜ் நிற்கக்கூடிய ஒன்பிளஸ் பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் நார்டு போனில் 10 நிமிட சார்ஜில், 10 மணி நேரம் சார்ஜ் நிற்கும் இயர் பட்ஸ் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 21 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை 30 ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 


 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Built well, comfortable design
  • 90Hz AMOLED display
  • 5G-ready processor
  • Good daylight camera performance
  • Solid battery life
  • Bad
  • Average low-light image quality
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4115mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியால 10 கோடி பேர் ChatGPT யூஸ் பண்றாங்களா? வாராந்திர பயனர்களில் இந்தியா 2-வது இடம்! மாணவர்கள் தான் டாப்
  2. Vivo X300 FE லான்ச் ரெடி! 90W சார்ஜிங் கூடவே 6500mAh பேட்டரியா? விவோ-வின் இந்த பட்ஜெட் பிளாக்ஷிப் போன் பத்தி தெரிஞ்சிக்கோங்க
  3. சாம்சங் ஃபோல்டபிள் போன்ல இனிமே அந்த பிரச்சனை இருக்காது! புதிய "Wide" டிசைன் ரெடியாகுது! இதோ லீக் ஆன தகவல்கள்
  4. Apple-ல இருந்து மலிவு விலையில ஒரு MacBook-ஆ? அதுவும் செம்ம கலர்ஸ்ல வருதா? ஆப்பிள் பிரியர்களுக்கு இதோ ஒரு செம்ம குட் நியூஸ்
  5. AI உலகமே டெல்லிக்கு வருது! இந்தியாவின் முதல் AI Impact Summit 2026 - எப்படி Register செய்வது? Full Schedule இதோ
  6. பட்ஜெட் விலையில ஒரு தரமான சம்பவம்! Lava Yuva Star 3 லான்ச் ஆகிடுச்சு! 5000mAh பேட்டரியோட ஒரு 'ஸ்டார்' போன்
  7. மியூசிக் லவ்வர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்! Sony WF-1000XM6 லான்ச் ஆகிடுச்சு! நாய்ஸ் கேன்சலேஷன்ல இதுதான் இப்போ ராஜா
  8. சும்மா சில்லுன்னு ஒரு நியூஸ்! Panasonic 2026 AC Range இப்போ இந்தியாவில லான்ச் ஆகிடுச்சு! தூசி படியாது, கரண்ட் மிச்சம்
  9. பட்ஜெட் விலையில ஒரு ஃபிளாக்ஷிப் கில்லர்! Infinix Note 60 Ultra கீக்பெஞ்ச்ல லீக் ஆகிடுச்சு! 200MP கேமரா, சாட்டிலைட் கனெக்டிவிட்டினு மிரட்டுது
  10. இனி பெரிய அடாப்டர் தேவையில்லை! சியோமியோட குட்டி 'மினி GaN' சார்ஜர் லான்ச் ஆகிடுச்சு! கேபிளும் உள்ளயே இருக்கு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.