போனுக்கு அடியில் வரும் சிம் ஸ்லாட்… ’ஒன்பிளஸ் 7’ பற்றிய பரபர தகவல்கள்!

விளம்பரம்
Tasneem Akolawala, மேம்படுத்தப்பட்டது: 17 ஏப்ரல் 2019 17:07 IST
ஹைலைட்ஸ்
  • ஒலிக்சர் தளத்தில் இது குறித்து தகவல் வந்துள்ளது
  • ஒலிக்சர், போன் கேஸ் தயாரிக்கும் நிறுவனம்
  • ஒன்பிளஸ் 7 போனில் ட்ரிப்பிள் ரியர் கேமரா இருக்கும் என்று எதிர்பார்ப்பு

ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் 7 போனின் பல வேரியன்ட்களை இந்த ஆண்டிற்குள் வெளியிடும் என்று தெரிகிறது. 

Photo Credit: Olixar

மே 14 ஆம் தேதிதான் ஒன்பிளஸ் 7 ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த போன் குறித்து தொடர்ந்து பரபர தகவல்கள் கசிந்து வருகின்றன. போன் கேஸ் தயாரிக்கும் நிறுவனமான ஒலிக்சர், ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட் போனுக்கான கேஸ்-ஐ விற்கத் தொடங்கியுள்ளது. இந்த கேஸ் டிசைனை வைத்துப் பாருக்கும்போது பாப்-அப் செல்ஃபி கேமரா, ட்ரிப்பிள் ரியர் கேமரா போன்ற அமைப்புகள் போனில் இருப்பது உறுதியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் 7 போனின் பல வேரியன்ட்களை இந்த ஆண்டிற்குள் வெளியிடும் என்று தெரிகிறது. 

ஒலிக்சர் தளத்தில், ஒன்பிளஸ் 7 போனிற்கான கேஸ் டிசைன் குறித்து பதிவிடப்பட்டுள்ளது. 5 வித கேஸ் டிசைன் சுமார் 1,100 ரூபாய்க்கு ஒலிக்சர் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. 

கேஸ் டிசைனை வைத்துப் பார்க்கும்போது, ட்ரிப்பிள் ரியர் கேமரா பின்புறமும், வலதுபுறத்தில் பவர் பட்டனும் இருக்கிறது. வால்யூம் பட்டன் இடது விளிம்பில் இருக்கிறது. போனின் அடியில் சிம் ட்ரே ஸ்லாட், மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் க்ரில், யுஎஸ்பி டைப் சி-போர்ட் உள்ளிட்டவை இருப்பது தெரிகிறது. 

ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7 ப்ரோ 5ஜி உள்ளிட்ட போன்களை அடுத்த மாதம் வெளியிடும் என்று தெரிகிறது. இந்த மூன்று போன்களுக்கும் அடிப்படையில் எந்தெந்த வகையில் மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து தற்போதைக்குத் தெரியவில்லை. 

ஆண்ட்ராய்டு பைய் மென்பொருள், 6.67 இன்ச் சூப்பர் ஆப்டிக் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 ப்ராசஸர், 8ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வசதி, ட்ரிப்பிள் ரியர் கேமரா- 48 & 16 & 8 மெகா பிக்சல் சென்சார் போன்ற வசதிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • All-day battery life
  • Loud stereo speakers
  • Bad
  • Below-average low-light camera performance
  • Inconsistent focus in portraits and macros
  • Poor low-light video stabilisation
 
KEY SPECS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus 7, OnePlus 7 Pro, OnePlus 7 Case, Olixar
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.