Photo Credit: Olixar
மே 14 ஆம் தேதிதான் ஒன்பிளஸ் 7 ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த போன் குறித்து தொடர்ந்து பரபர தகவல்கள் கசிந்து வருகின்றன. போன் கேஸ் தயாரிக்கும் நிறுவனமான ஒலிக்சர், ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட் போனுக்கான கேஸ்-ஐ விற்கத் தொடங்கியுள்ளது. இந்த கேஸ் டிசைனை வைத்துப் பாருக்கும்போது பாப்-அப் செல்ஃபி கேமரா, ட்ரிப்பிள் ரியர் கேமரா போன்ற அமைப்புகள் போனில் இருப்பது உறுதியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் 7 போனின் பல வேரியன்ட்களை இந்த ஆண்டிற்குள் வெளியிடும் என்று தெரிகிறது.
ஒலிக்சர் தளத்தில், ஒன்பிளஸ் 7 போனிற்கான கேஸ் டிசைன் குறித்து பதிவிடப்பட்டுள்ளது. 5 வித கேஸ் டிசைன் சுமார் 1,100 ரூபாய்க்கு ஒலிக்சர் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
கேஸ் டிசைனை வைத்துப் பார்க்கும்போது, ட்ரிப்பிள் ரியர் கேமரா பின்புறமும், வலதுபுறத்தில் பவர் பட்டனும் இருக்கிறது. வால்யூம் பட்டன் இடது விளிம்பில் இருக்கிறது. போனின் அடியில் சிம் ட்ரே ஸ்லாட், மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் க்ரில், யுஎஸ்பி டைப் சி-போர்ட் உள்ளிட்டவை இருப்பது தெரிகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7 ப்ரோ 5ஜி உள்ளிட்ட போன்களை அடுத்த மாதம் வெளியிடும் என்று தெரிகிறது. இந்த மூன்று போன்களுக்கும் அடிப்படையில் எந்தெந்த வகையில் மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து தற்போதைக்குத் தெரியவில்லை.
ஆண்ட்ராய்டு பைய் மென்பொருள், 6.67 இன்ச் சூப்பர் ஆப்டிக் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 ப்ராசஸர், 8ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வசதி, ட்ரிப்பிள் ரியர் கேமரா- 48 & 16 & 8 மெகா பிக்சல் சென்சார் போன்ற வசதிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்