Photo Credit: DHgate.com
ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒன்பிளஸ் 7 வரிசை போன்கள் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் என்று தகவல் வந்துள்ளது. மே 14 ஆம் தேதி ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படும் என்றும், அதில் ‘7 வரிசை' மாடல்கள் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7 வெனிலா வேரியன்ட், ஒன்பிளஸ் 7 ப்ரோ 5ஜி ஆகிய மாடல்கள் இன்னும் ஒரு மாதத்தில் சந்தைக்கு வர வாய்ப்புள்ளது.
பிரபல டெக் வல்லுநர் இஷான் அகர்வால் இது குறித்து தகவல்களை லீக் செய்துள்ளார். அவர்தான் அடுத்த மாதம் 14 ஆம் தேதி, 7 வரிசை மாடல்கள் ரிலீஸ் பற்றி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்த போன் வெளியீடு குறித்து ஒன்பிளஸ் நிறுவனமிடத்திலிருந்து எந்தவித தகவலும் வரவில்லை.
இதுவரை ஒன்பிளஸ் நிறுவனம், ஒரே போனின் பல வசதிகள் கொண்ட வகைகளைத்தான் ரிலீஸ் நாள் அன்று வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த முறை ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7 வெனிலா வேரியன்ட், ஒன்பிளஸ் 7 ப்ரோ 5ஜி ஆகிய மாடல்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது.
ஒன்பிளஸ் 7 கேஸ் குறித்தான சில புகைப்படங்கள் இணையத்தில் சில நாட்களுக்கு முன்னர் கசிந்து பரபரப்பை அதிகரித்துள்ளன. அந்த லீக்படி, 3 பின்புற கேமரா, மெல்லிய பெஸல் டிஸ்ப்ளே, பாப்-அப் செல்ஃபி கேமரா டிசைன், கீழ் லவுடு-ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
அதேபோல சிம் கார்டு மற்றும் மெமரி கார்டு ஸ்லாட்டுகள் போனுக்கு அடியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பல்வேறு தகவல்கள் ஒன்பிளஸ் 7 மாடல்கள் குறித்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும், போனில் வயர்-லெஸ் சார்ஜிங் வசதி இருக்காது என்று அந்நிறுவன சி.இ.ஓ பீட் லாவு கூறியுள்ளார்.
மேலும் போனின் உட்கட்டமைப்பு அம்சங்கள் குறித்து இதுவரை நமக்குக் கிடைத்த தகவல்படி, டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே, 6.67 இன்ச் சூப்பர் ஆப்டிக் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 ப்ராசெஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வசதி, மூன்று ரியர் கேமரா செட்-அப், ஆண்ட்ராய்டு பைய் இயங்கு மென்பொருள், வயர்-லெஸ் இயர் பட்ஸ் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்