கேமிங் ஸ்மார்ட்போனான ரெட் மேஜிக் மார்ஸினை நுபியா அறிமுகப்படுத்தியுள்ளது. ZTE-யின் துணை நிறுவனம் ரெட் மேஜிக்கின் வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்த தயாரிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபலமான வீடியோ கேமான காட் ஆஃப் வாரினை தொடர்ந்து இந்த போனிற்கு பெயரிடப்பட்டுள்ளது. குவால்கம் ஸ்நாப்டிராகன் 845 ப்ரசாஸர்ருடன் 10ஜிபி ரேமில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் நீர் மற்றும் காற்றின் மூலம் குளிர்விக்கப்படும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
சீனாவில் நுபியா ரெட் மேஜிக் 6ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் ஆரம்ப விலை CNY 2,699(ரூ.27,400). 8ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை CNY 3,199(ரூ.32,500). இதில் டாப் எண்ட் மாடலான 10ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் CNY 3.999 (ரூ.40,600) ஆகும். நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் கருப்பு, சிகப்பு நிறங்களில் கிடைக்கிறது.
ஒற்றை சிம் கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் ஆண்ட்ராய்டு 9.0 பை உள்ளது. 6 இன்ச் ஹெச்டி மற்றும் 18:9 என்ற வீதத்திலான திரையினைக் கொண்டுள்ளது. குவால்கம் ஸ்நாப்டிராகன் 845 ப்ராசஸரைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி/10ஜிபி ரேம்களில் கிடைக்கிறது.
இதன் முன்பக்க கேமரா 8 மெகா பிக்சல் ஆகும். பின்பக்க கேமரா 16 மெகா பிக்சலாகும். இதன் எடை 193 கிராமாகும். 3,800mAh பேட்டரியினைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்